அதிர்ச்சி: 17உயிர்களை பலி வாங்கிய தீண்டாமைச்சுவர்.. மீண்டும் கட்டிய உரிமையாளர்!

 

அதிர்ச்சி: 17உயிர்களை பலி வாங்கிய  தீண்டாமைச்சுவர்.. மீண்டும் கட்டிய உரிமையாளர்!

ஒரு சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியான சம்பவத்தினை தமிழகம் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்திருக்க முடியாது. கடந்த ஆண்டுதான் இந்த சோகம் அரங்கேறியது.

அதிர்ச்சி: 17உயிர்களை பலி வாங்கிய  தீண்டாமைச்சுவர்.. மீண்டும் கட்டிய உரிமையாளர்!

தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சோகத்திற்கு காரணமாக இருந்த சுவர் இப்போது மீண்டும் கட்டப்பட்டதுதான் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த நடூர் கிராமத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 2ம் தேதி அதிகாலையில் தொடர்ந்து பெய்த கனமழையினால் 20அடி உயர சுவர் இடிந்து விழுந்தது. மிகவும் உயரமான அந்த சுவட் இடிந்து அருகில் இருந்து வீடுகள் மீது விழுந்தது. காலை வேளையில் நடந்த விபத்தில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தைகள் உள்ளிட்ட 17 பேர் உயிரிழந்தனர். இந்த சோக சம்பவம் தமிழகத்தையே உலுக்கி எடுத்தது.

அதிர்ச்சி: 17உயிர்களை பலி வாங்கிய  தீண்டாமைச்சுவர்.. மீண்டும் கட்டிய உரிமையாளர்!


சிவசுப்பிரமணியம் என்பவர், தன் நிலத்திற்கு அருகில் இருக்கும் குடும்பங்களுக்கு இடைவெளி வேண்டுமென்று கட்டிய தீண்டாமைச்சுவர் என்ற சர்ச்சை வெடித்தது. வேண்டுமென்றே இத்தனை உயரத்துக்கு சுவர் எழுப்பி இருந்ததால் இது விபத்து அல்ல; திட்டமிட்ட கொலைதான் என்று பலரும் கூறிவந்தனர். ஆனால், இவ்வழக்கில் சிறை சென்ற சிவசுப்பிரமணியனை, எந்த உள்நோக்கத்துடனும் சுற்றுச்சுவர் கட்டப்படவில்லை. இது இயற்கையாக நடந்த அசம்பாவீதம் என்று கூறி, சிவசுப்பிரமணியனை ஜாமீனில் விடுவித்தது சென்னை உயர்நீதிமன்றம்.

17 பேர் மரணத்திற்கு காரணமான சிவசுப்பிரமணியம் விடுவிக்கப்பட்டது அதிர்ச்சி என்றால், அவர் மீண்டும் அதே உயரத்திற்கு சுவர் எழுப்பி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார்.

அதிர்ச்சி: 17உயிர்களை பலி வாங்கிய  தீண்டாமைச்சுவர்.. மீண்டும் கட்டிய உரிமையாளர்!

மீண்டும் விபத்து ஏற்பட்டு விடும் என்று அப்பகுதியினர் அச்சத்தில் இருக்க, விதிமுறைகளுக்கு உட்பட்டு மண் அரிப்பு ஏற்படாத வகையில் சுவர் கட்டப்பட்டுள்ளதாக சொல்லி வருகிறார் சிவசுப்பிரமணியம். ஆனால், அதிகாரிகள் வந்து ஆய்வு செய்து , சுவற்றினால் பாதிப்பு ஏதும் வராத என்று உத்தரவு அளிக்கும்படி வேண்டுகிறார்கள் அப்பகுதியினர்.

எந்த உள்நோக்கத்துடனும் அச்சுவர் கட்டப்படவில்லை என்றாலும் அது தீண்டாமைச்சுவர் என்றே அப்பகுதியினரும் சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர். மீண்டும் அந்த சுவர் எழுந்திருப்பது பல சர்ச்சைகளுக்கும் போராட்டங்களுக்கு வழி வகுத்திருக்கிறது.