ராமதாஸ் எழுதிய ‘சுக்கா… மிளகா… சமூகநீதி?’17-ல் வெளியீடு!

 

ராமதாஸ் எழுதிய ‘சுக்கா… மிளகா… சமூகநீதி?’17-ல் வெளியீடு!

சமூகநீதி குறித்த வரலாற்றை மக்கள் தெரிந்து கொள்வதற்காகவும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட 30 அமைப்புகளின் நிறுவனர் ராமதாஸ் எழுதிய ‘‘சுக்கா… மிளகா… சமூகநீதி?’’ என்ற தலைப்பிலான சமூகநீதி வரலாற்று நூல் பாட்டாளிகளின் சமூக நீதி நாளான வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி வெளியிடப்படுகிறது.

ராமதாஸ் எழுதிய ‘சுக்கா… மிளகா… சமூகநீதி?’17-ல் வெளியீடு!

இந்த நூல் வன்னியர்களின் இட ஒதுக்கீட்டுப் போராட்ட தியாகிகள் நாளும், பாட்டாளிகளின் சமூகநீதி நாளுமான செப்டம்பர் 17 -ஆம் தேதி ராமதாஸ் முன்னிலையில் வெளியிடப்படும். இணைய வழியில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் நூலை பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் ஆலோசனைக்குழுத் தலைவரும், இட ஒதுக்கீட்டுப் போராட்ட முன்னோடியுமான பேராசிரியர் தீரன் வெளியிட, இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தின் போது சேத்தியாத்தோப்பில் நடைபெற்ற சாலைமறியல் போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மார்பில் பாய்ந்த குண்டுகளைத் தாங்கிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் தியாகி தட்டானோடை செல்வராஜ் பெற்றுக்கொள்கிறார்.