வைகோ, திருமாவுக்கு மே-17 இயக்கம் ஆதரவு

 

வைகோ, திருமாவுக்கு மே-17 இயக்கம் ஆதரவு

திமுக கூட்டனியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், சிபிஐ, சிபிஎம், மமக, முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் இணைந்து எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை சந்திக்கின்றன. இதில், மதிமுக, விசிக, சிபிஐ, சிபிஎம் கட்சிகள் தலா 6 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.

வைகோ, திருமாவுக்கு மே-17 இயக்கம் ஆதரவு

இதையடுத்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், சிபிஎம் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார் மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி.

வைகோ, திருமாவுக்கு மே-17 இயக்கம் ஆதரவு

’’பாசிச பாஜக-அதிமுகவிற்கு எதிராக வெற்றியடைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநில தலைவர் தோழர்.பாலகிருஷ்ணன், மற்றும் சிஐடியு தலைவர் தோழர்.அ.சவுந்திரராசன் அவர்களுக்கு வாழ்த்துகளையும், ஆதரவையும் தெரிவித்தோம்.

வைகோ, திருமாவுக்கு மே-17 இயக்கம் ஆதரவு

பாஜக எதிர்ப்பில் தொடர்ந்து பயணிக்கும் தமுமுகவின் மூத்த தலைவர் ஐயா.குணங்குடி அனிபா, பொறுப்பாளர்கள் மற்றும் மனிதநேயமக்கள் கட்சி தோழமைகளுக்கும் வாழ்த்துகளை, ஆதரவையும் தெரிவித்தோம்.

வைகோ, திருமாவுக்கு மே-17 இயக்கம் ஆதரவு

SDPIகட்சியின் தேசிய தலைவர் தோழர்.தெகலான்பாகவி, பொறுப்பாளர்களையும் சந்தித்தோம். தமிழ்நாட்டின் வாழ்வாதார போராட்டங்கள், தமிழீழ விடுதலை, திராவிட அரசியலென 55 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து பங்காற்றிவரும் மதிமுகவின் பொதுச்செயலாளர், ஐயா.வைகோ அவர்களைச் சந்தித்து எமது ஆதரவையும், வாழ்த்துகளையும் தெரிவித்தோம்’’என்று தெரிவித்துள்ளார் திருமுருகன் காந்தி.

வைகோ, திருமாவுக்கு மே-17 இயக்கம் ஆதரவு