அழகிரியை யாரும் திரும்பிகூட பார்க்கமாட்டார்கள்… மார்க்சிஸ்ட் கடும் தாக்கு

 

அழகிரியை யாரும் திரும்பிகூட பார்க்கமாட்டார்கள்… மார்க்சிஸ்ட் கடும் தாக்கு

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி, உட்கட்சி பூசலால் கடந்த 2014ம் ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அன்றிலிருந்து அவர் மீண்டும் திமுகவில் இணையப்போவதாகவும், தனிக்கட்சி தொடங்கப்போவதாகவும், பாஜகவில் இணையப்போகிறார், அதிமுகவில் இணையப்போகிறார் என்றும் தொடர்ந்து செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.

அழகிரியை யாரும் திரும்பிகூட பார்க்கமாட்டார்கள்… மார்க்சிஸ்ட் கடும் தாக்கு

தற்போது சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் , அந்த பேச்சு அதிகம் இருக்கிறது. இது குறித்த கேள்விக்கு, ஆதரவாளர்களுடன் பேசி முடிவை அறிவிக்கப்போவதாகவும், சட்டமன்ற தேர்தலில் என் பங்கு நிச்சயம் இருக்கும் என்றும் அழகிரியும் பரபரப்பை கூட்டி வருகிறார்.

இந்நிலையில் இன்று மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, ’’ 8 ஆண்டுகளாக அரசியல் வாசம் இல்லாமல் இருக்கிறார் அழகிரி. அவர் வந்து சட்டமன்ற தேர்தலில் என்ன பண்ணப்போகிறார். அவரை யாரும் திரும்பி கூட பார்க்க மாட்டார்கள்’’ என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.