அந்த இட ஒதுக்கீடுக் காகத்தான் எடப்பாடியை சந்தித்தாரா அன்புமணி?

 

அந்த இட ஒதுக்கீடுக் காகத்தான் எடப்பாடியை சந்தித்தாரா அன்புமணி?

வன்னியர்களுக்கு இருபது சதவிகிதம் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரி பாமக சார்பில் சென்னையில் இன்று போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் பங்கேற்ற பின்னர் பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி தலைமைச்செயலகம் சென்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினார்.

அந்த இட ஒதுக்கீடுக் காகத்தான் எடப்பாடியை சந்தித்தாரா அன்புமணி?

இச்சந்திப்பில் வன்னியர்களுக்கு 20சதவிகித இட ஒதுக்கீடு கோரினார் அன்புமணி என்று பாமக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்பது குறித்து பேசவே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அனுமதி சந்தித்தார் என்று சொல்கிறது தலைமைச்செயலக வட்டாரம்.

கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்குவது என்று முடிவு செய்துவிட்டாராம். பாஜகவுக்கு25இடங்கள் என்றும், பாமகவுக்கு 20, தேமுதிகவுக்கு 15 இடங்கள் என்று எடப்பாடியார் முடிவெடுத்திருக்கும் தகவல் அன்புமணிக்கு எட்டியிருக்கிறது. கூட்டணியில் பாஜகவுக்கு இரண்டாவது இடம் ஒதுக்கி இருப்பது ஏற்புடையதல்ல. பாமகவுக்குத்தான் இரண்டாவது இடம் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கையை முன் வைத்திருக்கிறாராம் அன்புமணி. அதாவது பாமகவுக்கு 30 இடம் ஒதுக்கீடு செய்யுமாறு கேட்டிருக்கிறாராம் எடப்பாடி பழனிச்சாமியிடம்.

வன்னியர் இட ஒதுக்கீடு பிரச்சனைக்காகத்தான் முதல்வரை சந்தித்திருக்கிறார் அன்புமணி. அப்படியே அந்த இட ஒதுக்கீட்டு பிரச்சனையையும் பேசிவிட்டு வந்திருக்கிறார் போலிருக்கிறது.