மூன்று கட்சிகளிடம் சிக்கி விழிபிதுங்கும் ரஜினி!

 

மூன்று கட்சிகளிடம் சிக்கி விழிபிதுங்கும் ரஜினி!

கட்டாந்தரையில் ஒரு துண்டை விரித்தால் தூக்கம் கண்ணில் சொக்குமே அது அந்த காலமே.. மெத்தை விரித்தும் சுத்த பன்னீர் தெளித்தும் கண்ணில் தூக்கம் இல்லையே அது இந்த காலமே.. என்று அண்ணாமலை படத்தில் ரஜினி பாடி நடித்தது இன்று அவருக்கே நிஜமாக மாறியிருக்கிறது.

சென்னை பிளாட்பாரங்களில் தூங்கி கழித்த ரஜினிக்கு இன்று ஏராளமான சொத்துக்கள் இருக்கின்றன. புகழ், பணம், கொண்டாட்டம் என்று எல்லாம் பார்த்துவிட்டதால், பரபரப்பாகவே வாழ்ந்துவிட்டதால் கடைசிக்காலங்களை அமைதியாக கழிக்கவே விரும்புகிறார் ரஜினி. தனக்கு நெருக்கமானவர்களிடம் இதையே சொல்லியும் வருகிறார்.

மூன்று கட்சிகளிடம் சிக்கி விழிபிதுங்கும் ரஜினி!

புகைப்பழக்கமும், மதுப்பழக்கமும் அதிகம் வைத்திருந்த ரஜினி, உடல்நலம் கருதி அதையும் தள்ளி வைத்திருக்கிறார். இரண்டு மகள்களையும் திருமணம் செய்துகொடுத்து அழகு பார்த்து, பேரப்பிள்ளைகளையும் தூக்கி எடுத்து கொஞ்சிவிட்டார். தனக்கும் தன்னை சேர்ந்தவர்களுக்கு போதுமான செல்வமும் இருக்கிறது. இதற்கு மேலும் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. அதுவும் நிம்மதி இழந்து, தன்மானம் இழந்து சேர்க்க வேண்டிய அவசியம் எதுவும் வேண்டாம் என்றுதான் அவர் தேவையில்லாத எந்த விசயங்களிலும் தலையிட தயக்கம் காட்டி வருகிறார்.

ஆனால், ரஜினியின் செல்வாக்கை வைத்து ஆதாயம் பார்த்துவிட பலரும் துடிக்கிறார்கள். இதில்தான் தர்மசங்கடத்தில் சிக்கி தவிக்கிறார் ரஜினி.

மூன்று கட்சிகளிடம் சிக்கி விழிபிதுங்கும் ரஜினி!

ரசிகர்களின் பல ஆண்டுகால வற்புறுத்தலின் பேரில்தான் அவர் கட்சி தொடங்கும் முடிவுக்கு வந்தார். போர்வரும்போது போராடுவோம் என்று ரசிகர்களை சந்தோசப்படுத்தினார். மாவட்டம்தோறும் பூத்களை பலப்படுத்தவும் சொல்லி வந்தார். ஆனால், இப்போது கொரோனா, உடல்நலம் , பொலிட்டிக்கல் பிரஷர் என்று அவர் தள்ளிப்போட்டுக்கொண்டே போவதற்கு காரணம், உண்மையிலேயெ பொலிட்டிக்கல் பிரஷர்தானாம்.

ரஜினியை கட்சி ஆரம்பிக்கச்சொல்லி ஒரு கட்சி பிரஷர் கொடுத்துவர, அதே நேரத்தில் ரஜினி கட்சி ஆரம்பிக்கக்கூடாது என்று இரண்டு கட்சிகள் அவருக்கு அதிகம் பிரஷர் கொடுத்து வருகின்றது என்று ரஜினிக்கு நெருக்கமான வட்டாரத்தில் இருந்து தகவல் கசிகிறது.

எல்லாம் தனக்கு இருக்கிறது. அதனால் அரசியல் வேண்டாம் என்று சொல்லும் ரஜினியிடம் தங்களுக்கு என்ன இருக்கிறது என்று கேட்பதால்தான், உங்களை எல்லாம் நடு ரோட்டுல விட்டுட மாட்டேன். ஏதாவது செய்வேன் என்று ரசிகர்களிடம் சொல்லி சமாளித்திருக்கிறார்.

மூன்று கட்சிகளிடம் சிக்கி விழிபிதுங்கும் ரஜினி!

ரஜினி ஏன் மாற்றி மாற்றி பேசுகிறார். முடிவை அறிவிக்காமல் ஏன் மூன்று முகம் காட்டுகிறார்? என்றெல்லாம் மக்கள் கேட்கிறார்கள் என்றால், மூன்று கட்சிகளிடம் சிக்கி அவர் விழிபிதுங்குவதையே காட்டுகிறது. மூன்றுமே பிரதான கட்சிகள் என்பதால்தான் மூன்று கட்சிகளையுமே பகைத்துக்கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறாராம் ரஜினி.