புயல் வந்தால் சேதம் தானே ஆகும்; ஒரு கிராமத்திற்கு தங்கம் வருது!

 

புயல் வந்தால் சேதம் தானே ஆகும்; ஒரு கிராமத்திற்கு தங்கம் வருது!

புயல் வந்தாலே ஊரெல்லாம் அச்சப்படும் நிலையில், ஒரு கிராமம் மட்டும் சந்தோசத்தில் துள்ளிக்குதிக்கிறது. ஆந்திராவில் இருக்கிறது அந்த வினோத கிராமம். அந்த சந்தோசத்திற்கான காரணமாக அக்கிராமத்தினர் சொல்லுவதும் ஆச்சரியமாக இருக்கிறது.

புயல் வந்தால் சேதம் தானே ஆகும்; ஒரு கிராமத்திற்கு தங்கம் வருது!

ஆந்திர மாநிலத்தின் கோதாவரி மாவட்டத்தில் இருக்கிறது உப்பாடா கடற்கரை. இந்த பகுதியை ஒட்டிய மக்கள், புயல் அடித்து ஓய்ந்த பின்னர் உப்பாடா கடற்கரைக்கு ஓடுகின்றனர். கரை முழுவது தேடும்போது அவர்களுக்கு தங்க நகைகள் கிடைக்கிறதாம்.

கடந்த நிவர் புயிலிலும் இவர்கள் இப்படியே செய்ததால் சிலருக்கு தங்க மணிகள் கிடைத்திருக்கிறது.

புயல் வந்தால் சேதம் தானே ஆகும்; ஒரு கிராமத்திற்கு தங்கம் வருது!

ஒவ்வொரு புயலிலும் இப்படி தங்க நகைகள் கிடைப்பாதால்தான் புயல் வந்தால் சந்தோசத்தில் துள்ளிக்குதிக்கிறார்கள் உப்பாடா கிராமத்தினர்.

புயல் வந்தால் அப்பகுதியில் எப்படி தங்க நகைகள் கிடைக்கிறது என்று அக்கிராமத்தின் மூத்தகுடிகளிடம் விசாரித்தபோது, உப்பாடா கடற்கையை ஒட்டி கோயில் இருந்ததாக சொல்கிறார்கள். கோயிலுக்கு வருவோர் புனித நீராடியிருக்கலாம். அப்போது நகைகள் தண்ணீருக்குள் போயிருக்கும். புயலில் பெரிய அலைகளில் அந்த நகைகள் அள்ளிவரப்பட்டு வீசப்படலாம். அதுதான் தொடர்ந்து இப்பகுதியில் கிடைக்க காரணமாக இருக்கலாம் என்கிறார்கள்.