சென்னையில் உளவுத்துறை அதிகாரி மனைவியின் தற்கொலை: விசாரணையை இழுத்தடிப்பது ஏன்?

 

சென்னையில் உளவுத்துறை அதிகாரி மனைவியின்  தற்கொலை: விசாரணையை இழுத்தடிப்பது ஏன்?

சென்னையில் உளவுத்துறை அதிகாரி மனைவியின் தற்கொலை வழக்கில் விசாரணையை வேண்டுமென்றே இழுத்தடிப்பதாக புகார் எழுந்திருக்கிறது.

மத்திய உளவுத்துறை அதிகாரியான விசாகபட்டினத்தை சேர்ந்த ஹரிஷ்குமார், அதே விசாக பட்டினத்தை சேர்ந்த நிகிதாவை கடந்த ஓராண்டுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டுள்ளார். திருமணத்திற்கு பின்னர் இருவரும் சென்னையில் தனிக்குடித்தனம் நடத்தி வந்துள்ளனர்.

நிகிதாவிடம் 20 லட்சம் வரதட்சனை கேட்டு மாமியார் அடிக்கடி போன் செய்து வந்ததால் , கணவரும் அதுகுறித்து எதுவும் கேட்காததால், கோபப்பட்டுக் கொண்டு தாய் வீட்டுக்கே சென்றிருக்கிறார் நிகிதா. அதன்பின்னர் பெற்றோர் வந்து நிகிதாவை சமாதானப்படுத்தி விட்டு சென்றிருக்கிறார்கள்.

சென்னையில் உளவுத்துறை அதிகாரி மனைவியின்  தற்கொலை: விசாரணையை இழுத்தடிப்பது ஏன்?

வரதட்சனையும் கொடுக்காமல், பிரச்சனையும் செய்ததால் மருமகளை சுதந்திரமாக விடக்கூடாது என்ற எண்ணத்தில் மாமியார் ரமணியும் சென்னைக்கு வந்திருக்கிறார். இதன்பின்னர் பிரச்சனை இருந்து அதிகரித்திருக்கிறது.

இந்நிலையில், நிகிதா தற்கொலை செய்துகொண்டாத அடையாறு சாஸ்திரி நகர் போலீசுக்கு தகவல் வர, போலீசார் வந்து நிகிதா உடலை கைப்பற்றி உள்ளனர்.

நிகிதா தற்கொலைக்கு முன்பு எழுதியதாக சொல்லப்படும் ஒரு கடிதத்தில், என்னால் இனி வாழமுடியாது என்றும், என் மரணத்துக்கு யாரும் பொறுப்பு கிடையாது என்றும் எழுதப்பட்டுள்ளது.

திருமணமாகி ஒரு ஆண்டுதான் ஆகிறது என்பதாலும், மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக நிகிதா பெற்றோர் அளித்த புகாரின் பேரிலும் ஆர்.டி.ஓ விசாரணைக்கு மாற்றப்பட்டிருக்கிறது.

ஆனாலும் வழக்கு விசாரனையை விரைந்து முடிக்காமல் இழுத்தடிப்பதாக நிகிதாவின் பெற்றோர் புகார் தெரிவிக்கின்றனர்.