அங்கே பேரப்பிள்ளையும் வந்துட்டார்..இங்கே பிச்சை எடுத்துக்கிட்டு இருக்கோம்… ராமதாசின் ஆதங்கம்

 

அங்கே பேரப்பிள்ளையும் வந்துட்டார்..இங்கே பிச்சை எடுத்துக்கிட்டு இருக்கோம்… ராமதாசின் ஆதங்கம்

எந்தஒரு நாட்டிலும் அங்கிருக்கும் பெரும்பான்மை சமுதாயம்தான் அதிகாரத்தில் இருக்கும். ஆனால், தமிழகத்தில் பெரும்பான்மை சமுதாயமாக வன்னியர் சமுதாயம் இருந்தும், பாமக இன்னமும் ஆட்சி அதிகாரத்திற்கு வர முடியவில்லை என்று, ட்சியினரிடையே தனது ஆதங்கத்தை தொடர்ந்து பதிவு செய்து வருகிறார் பாமக நிறுவனர் ராமதாஸ். அதே நேரம் மிகவும் சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்த கருணாநிதி 5 முறை ஆண்டுவிட்டார் என்றும் ஆதங்கப்பட்டு வருகிறார்.

கட்சியினருடனான நேற்றைய கலந்துரையாடலிலும் அந்த ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு இருபது சதவிகிதம் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரி நாளை 1.12.2020 முதல் பாமக போராடம் நடத்துகிறது. இந்த இட ஒதுக்கீட்டு போராட்டம் தொடர்பாக தம்பிகள் படை, தங்கைகள் படை மற்றும் இளைஞர்கள், இளம்பெண்கள் ஆகியோருடன் இணையவழியாக உரையடப்போகிறேன் என்று ராமதாஸ் தெரிவித்திருந்தார்.

அங்கே பேரப்பிள்ளையும் வந்துட்டார்..இங்கே பிச்சை எடுத்துக்கிட்டு இருக்கோம்… ராமதாசின் ஆதங்கம்
பாமக நிறுவனர் ராமதாஸ்

அதன்படி நேற்று மாலை நடந்த இந்த கலந்துரையாடலின்போது, பாமக இன்னமும் ஆட்சிக்கு வர முடியவில்லையே என்று ஆதங்கப்பட்டிருக்கிறார் ராமதாஸ்.

வன்னியர்களின் தொடர்சாலை மறியல் போராட்டத்தினால், 25.11.1987 அன்று தன்னையும், பிற சமுதாயத் தலைவர்களையும் அழைத்துப் பேசிய அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர், வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க ஒப்புக்கொண்டார். ஆனால், அடுத்த ஒரு மாதத்திற்குள்ளாக அவர் மறைந்து விட்டார் என்று தெரிவித்துள்ள ராமதாஸ்,

எம்.ஜி.ஆருக்கு பிறகான ஆளுநர் ஆட்சியில் , சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்காக 12.12.1988 அன்று அரசாணை வெளியிடப்பட்டது.
ஆளுனர் ஆட்சியில் வெளியிடப்பட்ட அரசாணையின்படி, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு செய்திருந்தால் வன்னியர்களுக்கு மட்டும் 20%-க்கும் கூடுதலாக இட ஒதுக்கீடு கிடைத்திருக்கும். அவ்வாறு கூடுதல் இட ஒதுக்கீடு கிடைப்பதைத் தடுப்பதற்காகத் தான் 1989ம் ஆண்டில் கருணாநிதி அவசரம், அவசரமாக இடஒதுக்கீடு வழங்கினார் என்று தெரிவித்துள்ள ராமதாஸ்,

அங்கே பேரப்பிள்ளையும் வந்துட்டார்..இங்கே பிச்சை எடுத்துக்கிட்டு இருக்கோம்… ராமதாசின் ஆதங்கம்

கருணாநிதியிடம் வன்னியர்களுக்கு 20 சதவிகிதம் தனி ஒதுக்கீடு வேண்டும் என்று நான் வலியுறுத்தியும், அதற்கு வாய்ப்பில்லை என்று கூறிவிட்டதால்,இட ஒதுக்கீட்டை 6 தொகுப்புகளாக பிரித்து வழங்கலாம்னு சொன்னேன்.50 சதவிகிதம் இட ஒதுக்கீட்டில் உள்ள 202 சாதிகளை 6 பிரிவுகளாக பிரித்து கருணாநிதியிடம் அளித்து, தனி இட ஒதுக்கீடு கேட்டேன். வன்னியர்களுடன் நரிக்குறவர், வண்ணார் சாதிகளையும் சேர்த்திருந்ததை பார்த்த கருணாநிதி, இதிலும் கூட 10 ஆயிரம் பேர் கொண்ட தனது சமூகத்தை சேர்க்கவில்லையே ஏன் என்று கேட்டார்.

அங்கே பேரப்பிள்ளையும் வந்துட்டார்..இங்கே பிச்சை எடுத்துக்கிட்டு இருக்கோம்… ராமதாசின் ஆதங்கம்

அந்த அளவுக்கு வெறும் 10 ஆயிரம் மட்டுமே கொண்ட ஒருத்தர் 5 முறை ஆட்சி அதிகாரத்துக்கு வந்துட்டார். அவர் மகனும் இப்போது அதிகாரத்துக்கு வர துடிக்கிறார். இதோ பேரப்பிள்ளையும் வந்துட்டார். ஆனா, இங்கே இத்தனை மக்கள் தொகை இருந்தும் இன்னமும் ஆட்சிக்கு வரமுடியாம இட ஒதுக்கீட்டு கேட்டு பிச்சை எடுத்துக்கிட்டு இருக்குறோம்’’ என்று தனது ஆதங்கத்தை கொட்டி இருக்கிறார்.

மேலும், வன்னியருக்கு மட்டும் கிடைக்க வேண்டிய 20 சதவிகித இட ஒதுக்கீட்டை தமது இசைவேளாளர் சமுதாயம் உள்ளிட்ட 108 சமூகங்கள் கொண்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவுக்கு வழங்கி துரோகம் இழைத்தவர்தான் கருணாநிதி என்றும் தனது கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் ராமதாஸ்.