பொலிட்டிக்கல் பிரஷர்… உண்மையைச்சொன்ன ரஜினி

 

பொலிட்டிக்கல் பிரஷர்… உண்மையைச்சொன்ன ரஜினி

’ரஜினியின் கொரோனா அரசியல்’ என்று தனிப்புத்தகமே எழுதிவிடலாம் போலிருக்கிறது. அந்த அளவுக்கு மனுசர் கொரோனா… கொரொனா… கொரோனா என்று சொல்லியே அரசியல் முடிவை அறிவிப்பதில் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார்.

ரஜினி கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்பது அவரது ரசிகர்களின் முப்பது ஆண்டுகால கனவு. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு காரணம் சொல்லி அரசியல் பேச்சை தள்ளிப்போட்டுக்கொண்டே வந்த ரஜினி, தற்போது கொரோனாவை வசமாக பிடித்துக்கொண்டுவிட்டார்.

பொலிட்டிக்கல் பிரஷர்… உண்மையைச்சொன்ன ரஜினி

ரசிகனிடம் ஒரு தலைவன், கட்சி முக்கியமா என் உடல் நிலை முக்கியமா என்று கேட்டால் என்ன சொல்வான். அது தெரிந்தேதான், இன்றைக்கு நடந்த ஆலோசனைக்கூட்டத்திலும் தனது உடல்நிலை குறித்து சொல்லவும், உள்ளுக்குள் அழுதுகொண்டே, ‘’தலைவா உங்க உடம்புதான் முக்கியம்’’ என்று சொல்லி இருக்கிறார்கள் மன்றத்து நிர்வாகிகள்.

கட்சி ஆரம்பித்தால் யாரையும் சார்ந்திருக்காமல் தனித்து போட்டியிடலாமா என்றெல்லாம் கேள்வி எழுப்பி நிர்வாகிகளை குஷிப்படுத்திவிட்டு, கட்சி தொடங்கி போய்கொண்டிருக்கும்போது திடீரெனு எனக்கு கொரோனா வந்துவிட்டால் என்னை நம்பி வந்த உங்க நிலைமை என்னவாகும் என்று கேட்டு மீண்டும் குழப்பியடித்திருக்கிறார் ரஜினி.

பொலிட்டிக்கல் பிரஷர்… உண்மையைச்சொன்ன ரஜினி

தடுப்பூசி வருதுன்னு நம்பிக்கையாக சொன்னவங்கிட்ட, அது வந்தாலும் என் உடம்புக்கு செட் ஆகுமான்னு தெரியல.. டாக்டர்சும் நம்பிக்கையா எதுவும் சொல்லல..என்று சொல்லவும், அதற்குமேல் கட்சிதொடங்கச்சொல்லி கேட்க முடியாத அளவுக்கு நிர்வாகிகளை தர்ம சங்கடத்திற்கு ஆளாக்கி இருக்கிறார் ரஜினி.

பொலிட்டிக்கல் பிரஷர் நிறைய இருக்குது. எதிர்பார்க்காத இடத்துல இருந்து எல்லாம் பிரஷர் வருது. பேசாம கட்சியா மாத்தாம, மன்றமாவே எப்போதும் இருந்தா என்ன? என்று கேட்டதும், மறுபடியும் முதல்ல இருந்தா..என்று அலுப்பில், எதுவும் சொல்லாமல் விழித்த நிர்வாகிகளிடம், நான் என்ன முடிவெடுத்தாலும் அது உங்களுக்கு ஓகேதானே என்று கேட்டதும், வேறு வழியின்றி ‘’ஓகே தலைவரே’’ என்று சொல்லிவிட்டு வெளியே வந்திருக்கிறார்கள்.

பொலிட்டிக்கல் பிரஷர்… உண்மையைச்சொன்ன ரஜினி

மண்டபத்தில் இருந்து வெளியே வந்த ரஜினியும், அவுங்க விருப்பத்தை சொல்லி இருக்காங்க. நான் என்ன முடிவெடுத்தாலும் அதுக்கு ஓகேன்னு சொல்லி இருக்காங்க. விரைவில் முடிவை அறிவிப்பேன்னு சொல்லி, மீண்டும் இழுத்தடித்திருக்கிறார்.

ஆலோசனை கூட்டத்துக்கு வந்தவுங்கள்ல பலரும், முப்பது வருசத்துக்கு முன்னாடியே கல்யாணம் ஆகி இருக்க வேண்டிய நாம இன்னமும் கோலம் போட்டுக்கிட்டு இருக்குறோமே என்று முணு முணுக்கிறார்கள்.