என்னை விட்டுடுங்க… கையெடுத்து கும்பிட்ட ரஜினி

 

என்னை விட்டுடுங்க… கையெடுத்து கும்பிட்ட ரஜினி

ஜெயலலிதாவுக்கு பிறகு அதிமுக காணாமல் போய்விடும் என்றும், கருணாநிதிக்கு பிறகு திமுக தத்தளிக்கும் என்றும் தப்பு கணக்கு போட்டுத்தான் தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டு இருக்குது என்று சொன்னார் ரஜினி. அந்த வெற்றிடத்தில் குடுகுடுவென்று ஓடி நாற்காலியை பிடித்துவிடலாம் என்று நினைத்த ரஜினிக்கு, நடப்பதெல்லாம் நேர் மாறாகவே இருக்கிறது.

அதிமுகவும், திமுகவும் எப்போதும் போலவே பலமான எதிர்க்கட்சிகளாக இருக்கின்றன. ரஜினியின் அரசியல் பிரவேச வேகத்தை முதலில் குறைத்தது இந்த விசயம்தான். அப்புறம்தான் கொரோனா, உடல்நிலை எல்லாம்.

என்னை விட்டுடுங்க… கையெடுத்து கும்பிட்ட ரஜினி

அதிமுகவும் திமுகவும் பலமாக இருக்கும்போது நாம் எப்படி அரசியல் பண்ண முடியும் என்று யோசித்துதான் அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முடிவில் இருந்து ரஜினி பின்வாங்கிக்கொண்டே இருக்கிறார் என்ற பேச்சுகள் எழுந்தாலும், ரஜினியை எப்படியாவது கட்சி ஆரம்பிக்க வைத்துவிட வேண்டும் என்றுஅவரது ரசிகர்கள் தீவிர முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

இன்றைக்கு நடந்த நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் கூட மன்றத்து நிர்வாகிகளின் வறுபுறுத்தலால்தான் நடந்திருக்கிறது. கயிறுகட்டி இழுத்து வராத குறையாகத்தான் ரஜினியை இந்த ஆலோசனை கூட்டத்திற்கு அழைத்து வந்திருக்கிறார்கள்.

கட்சி தொடங்கச்சொல்லி வலியுறுத்திய நிர்வாகிகளிடம் பேசியபோதும், அதிமுக- திமுக ரெண்டுமே ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கு. மன்றத்தை பலப்படுத்துங்கன்னு நானும் சொல்லிக்கிட்டே இருக்குறேன். நீங்க அத செய்யவே இல்ல. என் பேரச்சொல்லி காசு பார்க்குறதுலயே கவனமாக இருக்குறீங்க என்று ஆதங்கப்பட்ட ரஜினி,

சரி,சரி அதுக்காக நான் உங்கள நடுரோட்டுல விட்டுட்டு போயிடமாட்டேன். ஏதாச்சும் செய்வேன் என்று சொல்லிவிட்டு, என்னை விட்டுடுங்க.. என்று சொல்வதை போலவே கையெடுத்து கும்பிட்டிருக்கிறார்.