ரஜினிதான் முதல்வர் வேட்பாளர்! வலியுறுத்தும் நிர்வாகிகள்

 

ரஜினிதான் முதல்வர் வேட்பாளர்! வலியுறுத்தும் நிர்வாகிகள்

ரஜினிகாந்த் இன்று சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் தனது மன்றத்து நிர்வாகிகளுடன் அரசியல் பிரவேசம் குறித்து முடிவெடுப்பதற்கான ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார். இந்த ஆலோசனையில், ரஜினி உடனடியாக கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்று நிர்வாகிகள் வலியுறுத்தி வருவதாகவும், ரஜினியே முதல்வர் வேட்பாளாராக வேண்டும் என்றும் வலியுறுத்தி வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

ரஜினிதான் முதல்வர் வேட்பாளர்! வலியுறுத்தும் நிர்வாகிகள்

கட்சி ஆரம்பிப்பதில் வேகம் காட்டி வந்த ரஜினி, கொரோனா பொது முடக்கத்தினால் கட்சி தொடக்க வேலைகளையும் முடக்கிவிட்டார். ஆனாலும், தேர்தல் நெருங்கிவிட்ட வேளையில் நிர்வாகிகள் கொடுத்த நெருக்கடியினாலும், அரசியல் பிரவேசம் குறித்த முடிவினை அறிவித்தே ஆகவேண்டும் என்கிற நிர்ப்பந்தத்தினாலும் இன்று ஆலோசனைக்கூட்டத்தை கூட்டியிருக்கிறார் ரஜினி.

கட்சியே ஆரம்பித்தாலும் முதல்வர் வேட்பாளராக நான் இருக்கமாட்டேன் என்று ரஜினி அறிவித்திருந்தார். ஆனாலும், ரஜினிதான் முதல்வர் வேட்பாளர் ஆகவேண்டும் என்று நிர்வாகிகள் வலியுறுத்துவதால் அவர் கட்சி தொடங்கும் முடிவில் இருப்பதாகவே தெரிகிறது.

கட்சி தொடங்குவதை தாமதப்படுத்த வேண்டாம் என்றும், ஜனவரி மாதத்திலேயே கட்சி தொடங்க வேண்டும் என்றும், ரஜினிதான் முதல்வர் வேட்பாளர் என்றும் நிர்வாகிகள் வலியுறுத்தி வரும் நிலையில், ரஜினி என்ன முடிவெடுக்கப்போகிறாரோ?