கருணாநிதி என்னை ஏமாற்றியதால்தான் பாமகவை ஆரம்பித்தேன்… ராமதாஸ்

 

கருணாநிதி என்னை ஏமாற்றியதால்தான் பாமகவை ஆரம்பித்தேன்… ராமதாஸ்

வன்னியர் சமூகத்திற்கென தொடங்கப்பட்ட வன்னியர் சங்கம்தான் பின்னாளில் பாமக( பாட்டாளி மக்கள் கட்சி) ஆனது. 16. 7.1989ல் இக்கட்சி தொடங்கப்பட்டு 31 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது.

தொடக்கத்தில் யானை சின்னத்தில் போட்டியிட்டு வந்த பாமகவுக்கு 1998ல் மாம்பழம் சின்னம் கிடைத்தது. அப்போதிலிருந்து மாம்பழம் சின்னத்தையே கட்சியின் நிலையான சின்னமாக கொண்டிருக்கிறது பாமக.

தமிழக சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் தனது பங்களிப்பை செலுத்தி வரும் பாமக, அன்புமணி ராமதாசை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி பிரச்சாரம் செய்து வருகிறது.

கருணாநிதி என்னை ஏமாற்றியதால்தான் பாமகவை ஆரம்பித்தேன்… ராமதாஸ்

வரும் தேர்தலில் கூட்டணியா? தனித்து போட்டியா? என்பது குறித்து இன்னமும் அறிவிக்கப்படாத நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ், கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் காணொளி மூலம் கலந்துரையாடிக்கிறார்.

வரும் 1ம் தேதி முதல் வன்னியர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு கோரி பாமக நடத்தவிருக்கும் போராட்டம் தொடர்பாக இந்த கலந்துரையாடல் நடைபெற்றிருக்கிறது.

நேற்று நடந்த இந்த கலந்துரையாடலில், கட்சி தொடங்கியதற்கான காரணத்தை சொல்லி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் ராமதாஸ்.

கருணாநிதி என்னை ஏமாற்றியதால்தான் பாமகவை ஆரம்பித்தேன்… ராமதாஸ்

இட ஒதுக்கீடு போராட்டத்திற்காக தான் பலமுறை சென்றிருப்பதாகவும் சொன்ன ராமதாஸ், இட ஒதுக்கீடு போரட்டத்தின்போது 21 பேரை சுட்டுக்கொல்லப்பட்டதை சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார்.

இருபது சதவிகித இடம் ஒதுக்கீடு மட்டும் கிடைத்திருந்தால் வன்னியர்களில் பலரும் அரசு அதிகாரிகளாக வந்திருப்பார்கள். திட்டமிட்டே நம்மை கருணாநிதி ஏமாற்றிவிட்டார் என்று ஆத்திரப்பட்டிருக்கிறார்.

நல்ல பழத்தை கேட்ட எனக்கு அழுகிய கனியை கொடுத்தார் கருணாநிதி. 10 வருடங்களாக போராடி வந்தும் கருணாநிதி ஏமாற்றிவிட்டாரே என்ற கோபத்தில்தான் கட்சியை ஆரம்பித்தேன் என்று சொல்லி இருக்கிறார் ராமதாஸ்.