இன்றே அறிவிப்பாரா ரஜினி?

 

இன்றே அறிவிப்பாரா ரஜினி?

அரசியல் பிரவேசம் குறித்து மன்ற நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார் ரஜினிகாந்த்.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் இன்று(30.11.2020) காலை 10 மணிக்கும் தொடங்கும் அந்த ஆலோசனை கூட்டம் மதியம் 2 மணி வரைக்கும் நீடிக்கும் என்று தெரிகிறது.

இன்றே அறிவிப்பாரா ரஜினி?

ஆலோசனை கூட்டத்திற்கு மாவட்ட நிர்வாகிகள் 50 பேர் பங்கேற்க இருக்கிறார்கள். முகக்கவசம், சமூக இடைவெளி அரசு விதித்துள்ள அத்தனை கொரோன நிபந்தனைகளின் அடிப்படையில்தான் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 180 நாட்களுக்கும் குறைவான நாட்களே இருப்பதால், இந்த ஆலோசனை நடைபெறுகிறது. ஆலோசனை கூட்டத்தை முன்னிட்டு காலை 6 மணியில் இருந்தே ராகவேந்திரா திருமண மண்டபம் அருகே குவியத்தொடங்கிவிட்டார்கள் ரசிகர்கள்.

மன்ற நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கு பின்னர், ஆலோசனைக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து ரஜினிகாந்த் இன்று மதியமே செய்தியாளர்களை சந்தித்து அறிவிப்பாரா? இல்லை, பின்னர் அறிக்கை வாயிலாக தெரிவிப்பாரா என்பதை ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி, அரசியல் பிரமுகர்களும் எதிர்பார்த்திருக்கிறார்கள்.