ஜெபி நட்டா வீட்டில் அமித்ஷா, ராஜ்நாத்சிங் அவசர ஆலோசனை

 

ஜெபி நட்டா வீட்டில் அமித்ஷா, ராஜ்நாத்சிங் அவசர ஆலோசனை

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் கடந்த நான்கு நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். தடியடிக்கும், கண்ணீர் புகை குண்டுகளுக்கும் அஞ்சாமல் நடந்து வரும் இந்த போராட்டம் நாடெங்கிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சுவார்த்தைக்கான அழைப்பையும் நிராகரித்ததால், நிலைமை மோசமாவதை உணர்ந்து, பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா இல்லத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத்சிங், வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஆகியோர் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

ஜெபி நட்டா வீட்டில் அமித்ஷா, ராஜ்நாத்சிங் அவசர ஆலோசனை

இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், ‘’சாதி, மதம், மொழி, இனம் கடந்து ஒருங்கிணைந்த விவசாயிகளின் உரிமைப் புரட்சி. ஆளுங்கும்பலின் ஆணவம் தகர்த்து, தடைகளை நொறுக்கித் தலைநகர் தில்லிக்குள் காட்டாற்று வெள்ளமென பாய்ந்த உழவர்களின் எழுச்சி. மோடி அரசின் அடக்குமுறைக்கு அஞ்சாமல் முதியவர், சிறுவர் என அணிதிரண்டு ஆர்ப்பரிக்கும் யுகபுரட்சி’’ என்று இந்த போராட்டம் குறித்து தெரிவித்திருக்கிறார்.