தடை நீங்கியது; இனி நாய் பிரியாணி கிடைக்கும்!

 

தடை நீங்கியது; இனி நாய் பிரியாணி கிடைக்கும்!

நம்மூரில் சிக்கன் பி்ரியாணி, பீப் பிரியாணி, சிக்கன் தந்தூரி போல் சைனாவில் நாய் பிரியாணியும், நாய் பிரைடு ரைஸும், நாய் தந்தூரியும் உண்டு. நாகலாந்திலும் இது பிரபலம். ( சென்னையிலும் பல ஆயிரம் கிலோ நாய் கறி பிடிபட்டதாக பரபரப்பு செய்திகள் வந்தன)

தடை நீங்கியது; இனி நாய் பிரியாணி கிடைக்கும்!

இதற்காக நாய்களையும், நாய் இறைச்சியையும் இறக்குமதி செய்து வந்தது நாகலாந்து. நாய் இறைச்சிக்கூடங்களூம், நாய் இறைச்சி கடைகளும் நாகலாந்தில் அதிகம் உண்டு.

தடை நீங்கியது; இனி நாய் பிரியாணி கிடைக்கும்!

இறைச்சிக்காக கொண்டு வரப்படும் நாய்களின் கால்கள் மற்றும் வாய் கட்டப்பட்டு கோணிப்பைகளில் போட்டு அடைத்து கட்டி கொண்டு வரப்படுவதுதால், இந்த கொடூரம் கண்டு விலங்குகள் நல ஆர்வலர்கள் கொதித்தெழுந்தனர். இதனால் நாகலாந்து அரசு நாய்கள் இறைச்சிக்கு கடந்த ஜூலை மாதத்தில் தடை விதித்தது.

தடை நீங்கியது; இனி நாய் பிரியாணி கிடைக்கும்!

இந்த தடையை எதிர்த்து நாகலாந்து நீதிமன்றத்தில் நாய் இறைச்சி விற்பனையாளர்கள் வழக்கு தொடர்ந்தனர். இது குறித்து விளக்கம் அளிக்குமாறு செப்டம்பர் 14ம் தேதி வரை காலக்கெடு விதித்திருந்தது. அந்த தேதிக்குள் அரசு விளக்கம் அளிக்க தவறியதால், நாய் இறைச்சியும், நாய் உணவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி இருக்கிறது நீதிமன்றம்.

தடை நீங்கியது; இனி நாய் பிரியாணி கிடைக்கும்!

நாய் இறைச்சி விற்பனைக்கும், நாய்கள் இறக்குமதிக்கும் விதிக்கப்பட்டிருந்த தடை நீங்கியதால் நாய் இறைச்சி விற்பனையாளர்களும், நாய் இறைச்சி உணவகங்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இனி வழக்கம் போல நாகலாந்தில் நாய் இறைச்சியும், நாய் உணவும் கிடைக்கும் என்பதால் நாய் இறைச்சி பிரியர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.