ரஜினி வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு கடிதம்

 

ரஜினி வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு கடிதம்

ஜினி வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு கோரப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

சினிமா, அரசியல் என்று பரபரப்பாக இருந்த ரஜினிகாந்த், கொரோனாவினால் கடந்த எட்டு மாதங்களாக கேளம்பாக்கம் பண்ணை வீட்டிலேயே முடங்கிக்கிடந்தார். தீபாவளி அன்று போயஸ்கார்டன் வீட்டுக்கு வந்த அவர் ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறிவிட்டு, குடும்பத்துடன் பட்டாசு வெடித்து கொண்டாடினார்.

கட்சி, கொடி, என்று தீவிர ஆலோசனையில் இருந்த ரஜினி, தான் கட்சி தலைவர் தானே தவிர, முதல்வர் வேட்பாளராக இருக்கமாட்டேன் என்றெல்லாம் உறுதியான அரசியல் நிலைப்பாட்டில் இருந்த ரஜினியை கொரோனா கொடுங்காலம் அடியோடு மாற்றிவிட்டது.

ரஜினி வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு கடிதம்

கொரோனா தொற்று குறித்தும், உடல்நிலை குறித்தும் மருத்துவர்கள் எச்சரித்தால்தான் சினிமா ஷூட்டிங்கில் கலந்துகொள்வதையே தள்ளிப்போட்டிருக்கிறார் ரஜினி.

அடுத்தடுத்த படங்களில் நடிக்க அவசரம் காட்டி வந்த ரஜினியை அண்ணாத்த படத்தை கூட முடிக்க முடியாத அளவுக்கு மிரட்டி வைத்திருக்கிறது கொரோனா.

தேர்தலுக்கு இன்னும் 180 நாட்களே இருக்கும் நிலையில், அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டிய நெருக்கடி வந்துவிட்டதால், தனது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் எச்சரித்ததை சொன்ன ரஜினி, மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசித்த பின்னரே அரசியல் முடிவை அறிவிப்பேன் என்றார்.

அதன்படி, நாளை மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். இந்த சந்திப்பு ராகவேந்திரா கல்யாண மண்டபம் அல்லது போயஸ்கார்டனில் உள்ள தனது வீட்டிலேயே நடக்கிறதா என்று முடிவாகாத நிலையில், இரண்டு இடங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு கேட்டு ரஜினி சார்பில், அவரது மன்றத்தினர் காவல்துறை உயரதிகாரி்யிடம் கோரிக்கை மனு அளித்திருக்கிறார்கள்.

ரஜினி வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு கோரப்பட்டுள்ள விவகாரத்தினால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.