Home அரசியல் அமித்ஷாவுக்காக முடிவை மாற்றிக்கொண்ட ரஜினி!

அமித்ஷாவுக்காக முடிவை மாற்றிக்கொண்ட ரஜினி!

அமித்ஷாவின் தமிழக பயணத்தின்போது ரஜினியுடன் சந்திப்பு நிகழும் என்று அரசியல் ஆர்வலர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், அந்த சந்திப்பு நடக்காமலேயே டெல்லி சென்றார் அமித்ஷா. ஆனால், ரஜினியுடன் தான் ஆலோசனை நடத்தியது குறித்து சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் தங்கி இருந்த அமித்ஷாவின் சொல்லி இருக்கிறார் குருமூர்த்தி.

தமிழக பயணம் குறித்து டெல்லில் பாஜக மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தியபோது, பிரதமர் மோடி ரஜினியுடன் பேச வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டது. அதுகுறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில், ரஜினிகாந்த் நாளை சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மன்றத்தின் நிர்வாகிகளை சந்திக்கிறார்.

உடல்நிலை காரணம் கருதியும், கொரோனா வைரஸ் அச்சம் கருதியும் கட்சி ஆரம்பிப்பதா? வேண்டாமா? என்பதை மன்றத்தின் நிர்வாகிகளிடம் பேசி முடிவை அறிவிப்பதாக சொல்லி இருந்தார் ரஜினி. அதற்காகத்தான் அவர் நாளை ஆலோசனை கூட்டத்தினை கூட்டி இருப்பதாக தெரிகிறது.

இப்போதிருக்கும் தொழில்நுட்ப வசதிகளை வைத்து இருக்கின்ற இடத்திலேயே பாதுகாப்பாக இருந்துகொண்டு கட்சியை நடத்தலாம் என்று ரசிகர்கள் ரஜினிக்கு கடிதங்கள் எழுதி உள்ளனர். இதனையும் கவனத்தில் கொண்ட ரஜினி, நாளைக்கு என்ன சொல்லப்போகிறாரோ?

நாளை 30.11.2020 நடக்கும் இந்த ஆலோசனைக்கூட்டம் முன்னதாகவே கடந்த 20.11.2020 அன்றே நடைபெறுவதாக இருந்தது.

அமித்ஷா தமிழக வருகையினால் அந்த முடிவை மாற்றிக்கொண்ட ரஜினி, அமித்ஷா வந்து போன பிறகு ஆலோசனைக்கூட்டத்தை வைத்துக்கொள்ளலாம் என்று 20ம் தேதி நடக்கவிருந்த கூட்டத்தை ரத்து செய்திருக்கிறார் ரஜினி.

மாவட்ட செய்திகள்

Most Popular

நாளை 166 இடங்களில் 19,073 சுகாதாரப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி

தமிழகத்தில் நாளை 166 இடங்களில் சுகாதாரப் பணியாளர்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இதில் 160 இடங்களில் கோவிஷீல்டு மருந்துகளும் 6 இடங்களில் கோவேக்சினும் வழங்கப்பட உள்ளன.

“எம்ஜிஆா், ஜெயலலிதா போன்ற மனித நேயமிக்க தலைவா்கள் வரிசையில் எடப்பாடி பழனிச்சாமி”

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஊஞ்சப்பாளையத்தில் சமுதாய கட்டிடத்திற்கு பூமிபூஜை செய்து கட்டிடப்பணிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கிவைத்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்...

“2006 தேர்தலில் 2 ஏக்கர் இலவச நிலம் வழங்கப்படும் என்ற திமுகவின் அறிவிப்பு என்ன ஆனது?”

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே செய்தியாளர்களிடம் பேசிய தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ, “அதிமுக இணைய வேண்டும் என்பது குருமூர்த்தி கருத்து, அதிமுக தனித்தன்மையுடன் இருக்கிறது. யார்...

சசிகலாவை அதிமுகவில் மீண்டும் இணைத்துக்கொள்வது குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும்- புகழேந்தி

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தமிழக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க அதிமுக செய்தித்தொடர்பாளர் புகழேந்தி அவரது இல்லத்திற்கு வருகை தந்தார்.
Do NOT follow this link or you will be banned from the site!