ஐகோர்ட் கேள்வி..என்ன சொல்லப்போகிறார் அமித்ஷா?

 

ஐகோர்ட் கேள்வி..என்ன சொல்லப்போகிறார் அமித்ஷா?

தமிழக எம்.பிக்களுக்கு மத்திய அமைச்சர்கள் இந்தியில் பதில் அளிக்கும் விவகாரத்தில், விளக்கம் கேட்டு மத்திய உள்துறை அமைச்சருக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், உள்துறை அமைச் சகத்திற்கும், சி.ஆர்.பி.எப். பொது இயக்குநருக்கும் 9.10.2020 அன்று ஒரு கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்தில், ‘’சி.ஆர்.பி.எப்.க்கான தேர்வுக்கான 9 தேர்வு மையங்களில் வடமாநிலங்களில் 5ம், தென்மாநிலங்களில் 2ம், மேற்கு பகுதிக்கு ஒன்றும், கிழக்கு பகுதிக்கும் ஒன்றும் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு தேர்வு மையம் கூடம் இல்லை. ஒரு மையமாவது அமைக்க வேண்டும்’’ என்று கோரி்யிருந்தார்.

ஐகோர்ட் கேள்வி..என்ன சொல்லப்போகிறார் அமித்ஷா?

இதற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் இந்தியில் பதில் எழுதி இருந்தார்.

பொதுவாகவே தமிழக எம்.பிக்களின் கடிதங்களுக்கு இந்தியில் பதில் அளிக்கும் நடைமுறையை மத்திய அரசு பின்பற்றுகிறது. இது அலுவல் மொழி சட்டத்திற்கு எதிரானது என்றும், தமிழக மக்களுக்கு மத்திய அரசால் அனுப்பப்படும் கடிதங்கள் இந்தியில் இருக்கக்கூடாது என்றும், மத்திய அமைச்சர் இந்தியில் தனக்கு எழுதி்ய கடிதத்தை ஆங்கிலத்தில் தர வேண்டும் என்றும், இதை மீறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர், இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர், மத்திய அலுவல மொழித்துறை இணைச்செயலர் 8.12.2020க்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.