ஒரே பாணியில் மூன்று நண்பர்களை கொலை செய்த சைக்கோ

 

ஒரே பாணியில் மூன்று நண்பர்களை கொலை செய்த சைக்கோ

தூத்துக்குடியை சேர்ந்த இசக்கியும், மதுரையை சேர்ந்த சங்கரும் திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளனர். நண்பர்களான் இவர்கள் திருப்பூர் கல்லூரி சாலையில் தங்கி இருந்துள்ளனர்.

அந்த வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம் வந்ததால் அக்கம் பக்கத்தினர் திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே, போலீசார் வந்து பூட்டிக்கிடந்த வீட்டை உடைத்து உள்ளே சென்றனர்.

வீட்டிற்குள் மூடிக்கிடந்த தண்ணீர் தொட்டியை திறந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடந்தது. விசாரணையில் தொட்டிக்குள் கிடந்தது இசக்கி என்று தெரியவந்தது.

ஒரே பாணியில் மூன்று நண்பர்களை கொலை செய்த சைக்கோ

இதையடுத்து இசக்கியுடன் தங்கி இருந்த சங்கரை தேடியபோது, அவர் கொலைவழக்கில் கோவை சிறையில் அடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த திருப்பூர் போலீசார், சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் திருப்பூர் நீதிமன்றத்தில் அனுமதி கோரினர்.

சங்கரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதன்படி சங்கரிடம் நடத்திய விசாரணையில், இசக்கியின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்தது தெரியவந்தது.

மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அனுப்பர்பாளையத்தில் ஒரு நண்பரை அதே மாதிரி தலையில் கல்லைப்போட்டு கொலை செய்ததும், வெங்கமேடு ஏரியாவில் ஒரு நண்பரை அதே மாதிரியே தலையில் கல்லை போட்டு கொலை செய்ததும் தெரியவந்தது. அந்தகொலை வழக்குகளில்தான் தற்போது சிறையில் உள்ளான் சங்கர்.

மூன்று நண்பர்களையும் ஒரே பாணியில் கொலை செய்த சைக்கோவிடம் இருந்து வாக்குமூலம் பெற்ற பின்னர், இசக்கி கொலை தொடர்பாக அடுத்த நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறார்கள் போலீசார்.