கைதிகளின் வசதிக்காக சிறையில் ஏடிஎம்

 

கைதிகளின் வசதிக்காக சிறையில் ஏடிஎம்

பீகார் பூர்னியா மாவட்ட சிறைச்சாலையில் ஏடிஎம் இயந்திரம் நிறுவப்பட இருக்கிறது. ஏடிஎம் அமைப்பதற்காக எஸ்.பி.ஐ. வங்கி அதிகாரியும் ஒப்புதல் அளித்திருக்கிறார்.

இன்னும்15 தினங்களுக்குள் சிறைக்குள் ஏடிஎம் இயந்திரம் இயங்கும் என்று பூர்னியா மத்திய சிறை கண்காணிப்பாளர் ஜிதேந்திர குமார் தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலையில் 4 மணி நேர வேலை 8 மணி நேர வேலைக்கு ஏற்ப 52 ரூபாய் முதல் 103 ரூபாய் வரையிலும் வழங்கப்படுகிறது. இந்த சம்பளம் கைதிகளில் வங்கிக்கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் வரை சம்பளம் காசோலைகளாக வழங்கப்பட்டன. இதனால் கைதிகளுக்கு செலவுக்கு பணம் கொடுக்க உறவினர்கள் வருவதால் சிறைச்சாலை வாசலில் நீண்ட கூட்டம் நிற்க வேண்டியது இருக்கிறது என்பதால், அக்கூட்டத்தினை குறைப்பதற்காகத்தான் சிறை நிர்வாகம் இப்படி ஒரு செயலை செய்திருக்கிறது.

கைதிகளின் வசதிக்காக சிறையில் ஏடிஎம்

கைதிதிகள் இனி தங்களுக்கு தேவையானதை வாங்கிக்கொள்ள ஏடி எம் கார்டினை பயபடுத்தலாம் என்று தெரிவித்துள்ள சிறை நிர்வாகம், 750 கைதிகளில் இதுவரை 400 கைதிகளுக்கு ஏடி எம் கார்டு கொடுத்திருக்கிறது. மீதமிருப்போருக்கும் விரைவில் கொடுக்கப்பட விருக்கிறது.

இந்திய சிறை வரலாற்றில் கைதிதளுக்காக சிறையில் ஏடிஎம் தொடங்குவது இதுவே முதன்முறையாக இருப்பதால், இதற்கு ஏக வரவேற்பு கிடைத்திருக்கிறது.