இனிமேல் இந்த ஹெல்மெட் மட்டுமே அணிய அனுமதி! மத்திய அரசின் திடீர் அறிவிப்பு

 

இனிமேல் இந்த ஹெல்மெட் மட்டுமே அணிய அனுமதி!  மத்திய அரசின் திடீர் அறிவிப்பு

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி இந்தியாவின் வெப்பநிலைக்கு ஏற்ப எடை குறைந்த ஹெல்மெட்டுகள் தயாரிப்பது தொடர்பாக உருவாக்கப்பட்ட கமிட்டி கடந்த 2018ம் ஆண்டு விரிவான அறிக்கையை தாக்கல் செய்தது. மத்திய அரசு அந்த அறிக்கையை ஏற்றுக்கொண்டது.

அந்த கமிட்டியில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள், பிஐஎஸ் துறை வல்லுநர்கள் இடம்பெற்றிருந்தனர்.

இனிமேல் இந்த ஹெல்மெட் மட்டுமே அணிய அனுமதி!  மத்திய அரசின் திடீர் அறிவிப்பு

அந்த அறிக்கையின்படி தற்போது வாகன ஓட்டிகள் பயன்படுத்த வேண்டிய ஹெல்மெட் குறித்து மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இந்திய தர நிர்ணய பணியகத்தின் பிஐஎஸ் தர முத்திரை கொண்ட தலைகவசங்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் என்றும், இருசக்கர வாகன ஓட்டிகளும் இனிமேல் பிஐஎஸ் முத்திரை கொண்ட ஹெல்மெட்டை மட்டுமே அணிய வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.

மத்திய அரசின் இந்த அறிவிப்பினை, ஜெனிவா நாட்டைச்சேர்ந்த சாலை பாதுகாப்புக்கான சர்வதேச சாலை கூட்டமைப்பும் வரவேற்பு தெரிவித்திருக்கிறது.