178 தொகுதிகளில் 3வது இடத்தை பிடித்த நாம் தமிழர்

 

178 தொகுதிகளில் 3வது இடத்தை பிடித்த நாம் தமிழர்

தமிழக சட்டமன்ற தேர்தலில் நடந்த ஐந்து முனை போட்டியில் நாம் தமிழர் கட்சி மட்டுமே தனித்து போட்டியிட்டது. பல கட்சிகளும் கூட்டணியை இறுதி செய்யாமல் இருந்தபோதே, 117 ஆண் வேட்பாளர்கள் -117 பெண் வேட்பாளர்கள் என்று புதிய அத்தியாயத்துடன், தேர்தலில் களமிறங்கினார்கள் நாம் தமிழர்கள்.

178 தொகுதிகளில் 3வது இடத்தை பிடித்த நாம் தமிழர்

234 தொகுதிகளில் போட்டியிட்டு நாம் தமிழருக்கு ஒரு இடம் கூட கிடைக்காவிட்டாலும் கூட, திருவொற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தோல்வியை சந்தித்தாலும்கூட, 178 இடங்களில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 3-ஆவது இடத்தை பிடித்துள்ளனர்.

திமுக, அதிமுகக்கு அடுத்ததாக மூன்றாவது இடத்தை எந்தக் கட்சி பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பு தேர்தலுக்கு முன்பே எல்லார் மத்தியிலும் எழுந்தது. இந்த தேர்தலில் ஐந்து முனை போட்டி நிலவியதால் 3வது இடத்தை அமமுக கூட்டணி பிடிக்குமா? மக்கள் நீதி மய்யம் கூட்டணி பிடிக்குமா? என்றே பரவலனான பேச்சு இருந்தது. ஆனால், அவ்விரு கட்சிகளையும் தள்ளிவிட்டு, 234 தொகுதிகளிலும் தனித்துக் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 178 இடங்களில் மூன்றாவது இடம் பிடித்து தமிழக அரசியலில் முக்கி்ய கவனம் ஈர்த்திருக்கிறது.