அழகான இளம்பெண்களை மட்டும் தேர்வு செய்து… அமைச்சர் தொகுதியில் அரங்கேறும் அடாவடி

 

அழகான இளம்பெண்களை மட்டும் தேர்வு செய்து…  அமைச்சர் தொகுதியில்  அரங்கேறும் அடாவடி

இறைபணி என்ற பெயரில் சில முக்கிய கோயில்களுக்கு சிறுமிகளை பொட்டுக்கட்டிவிடும் தேவதாசி முறை ஒருகாலத்தில் இருந்தது. அது இப்போதும் இருப்பது அதிர்ச்சியையும் கவலையையும் தருகிறது.

ஆரம்ப காலங்களில் உயர்வாக பார்க்கப்பட்ட தேவதாசிகளை பின்னர் காமத்தை தணித்துக்கொள்ள பயன்படுத்தவும் தொடங்கிவிட்டதால் அந்த முறைக்கு எதிராக பலரும் வெகுண்டெழுந்தனர். அதில் குறிப்பிடத்தக்கவர் டாக்டர் முத்துலட்சுமி. முத்துலட்சுமியின் தொடர் முயற்சியினால் தமிழகத்தில் தேவதாசி முறை 1947ல் ஒழிக்கப்பட்டுவிட்டது.

அழகான இளம்பெண்களை மட்டும் தேர்வு செய்து…  அமைச்சர் தொகுதியில்  அரங்கேறும் அடாவடி

இந்தியாவின் பிற மாநிலங்களிலும் இந்த முறை ஒழிக்கப்பட்டு விட்டாலும் கர்நாடக மாநிலத்தில் இன்னமும் இந்த அவலம் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன. அதுவும் கர்நாடக வனத்துறை அமைச்சரின் தொகுதியில்தான் இந்த தேவதாசி முறை அதிகம் இருப்பது பலரின் கண்டனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

அந்த கிராமத்தில் உள்ள 18,20 வயதுக்குட்பட்ட இளம் பெண்களே இந்த தேவதாசி முறைக்கு அதிகம் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அப்படி பாதிப்புக்கு உள்ளான மூன்று தேவதாசிகளை சகி அறைக்கட்டளை மீட்டிருக்கிறது.

அந்த கிராமத்தில் உள்ள அழகான இளம்பெண்களை தேவதாசிகளாக மாற்றுகிறார்கள். போலீசுக்கும் அதிகாரிகளூக்கும் தெரிந்தால் பிரச்சனை என்பதால் இந்த தேவதாசி முறையை ரகசியமாக வைத்திருக்கிறது அந்த கிராமம்.

படிப்பறிவு இல்லாததால் சில ஆண்களின் வக்கிரபுத்தியை உணராமல், இளம்பெண்களும் அவரது குடும்பத்தினரும் தேவசாசி வலையில் வீழ்ந்துவிடுகின்றனர். ஆகவே, அந்த கிராம மக்கள் கல்வியில் மேம்பட பல உதவிகள் செய்து வருகிறது சகி அறக்கட்டளை.

அழகான இளம்பெண்களை மட்டும் தேர்வு செய்து…  அமைச்சர் தொகுதியில்  அரங்கேறும் அடாவடி

கர்நாடகாவில் கலபுர்கி மாவட்டத்தில் ஒரு கோயில் பூசாரி ஆயிரம் சிறுமிகளை தான் தேவதாசிகளாக ஆக்கியதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்திருக்கிறார். கர்நாடகாவில் தேவதாசி முறையை அடியோடு ஒழிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றமும் உத்தரவிட்டிருக்கிறது. ஆனாலும், அறியாமை கூட்டத்தினாலும் அதை வைத்து காலத்தை ஓட்டும் ஒரு கூட்டத்தினாலும் கர்நாடகாவில் இன்னமும் இருக்கத்தான் செய்கிறது தேவதாசி கொடுமை.

தேவதாசி முறையை ஒழிக்க தொடர்ந்து குரல் கொடுத்து வரும் சகி அறக்கட்டை, தேவசாதி மறுவாழ்வு மைய அலுவலர் கோபாலின் வலியுறுத்தலின் பேரில் தேவதாசி முறைக்கு ஆதரவாக இருக்கும் அந்த கிராமத்து ஆண்கள் கைது செய்யப்படும் நிலையில் இருப்பதால் அந்த அமைச்சர் தொகுதியில் பதற்றமாக இருக்கிறது.