ஜெயலலிதா போல் தோற்றமளிக்க அமெரிக்கா சென்ற கங்கனா! புதிய வீடியோ பரபரப்பு

 

ஜெயலலிதா போல் தோற்றமளிக்க அமெரிக்கா சென்ற கங்கனா! புதிய வீடியோ பரபரப்பு

மும்பை பாந்திரா போலீஸ் விசாரணையினால் தடைபட்டிருந்த தலைவி படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி இருக்கிறது. அப்படத்தின் படப்பிடிப்பில் இருந்து ஜெயலலிதாவின் ஆரம்பகால அரசியல் லுக்கில் இருக்கும் வீடியோவினை வெளி்யிட்டிருக்கிறார் நடிகை கங்கனா.

பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தில் சர்ச்சை எழுந்து மகாராஷ்டிராவை அதிரவைத்த சமயத்தில் கங்கனா ரணாவத்தும் அவரது சகோதரியும் ரங்கோலி சந்தலும் தெரிவித்த கருத்துக்கள் சுஷாந்த் சிங் மரண அதிர்வலைகளை அதிகப்படுத்தியது. ஆதாரமில்லாத குற்றங்களை சுமத்திய நீதிமன்றத்தின் நேரத்தினை வீணடித்ததோடு அல்லாமல், நாட்டில் ஒரு அசாதாரண சூழலையும் ஏற்படுத்தி பதற்றத்தை உண்டாக்கியதால் நீதிமன்றமே தாமாக முன்வந்து பதற்றத்தை ஏற்படுத்தியவர்கள் மீது வழக்கு தொடர்ந்து விசாரித்து வருகிறது.

ஜெயலலிதா போல் தோற்றமளிக்க அமெரிக்கா சென்ற கங்கனா! புதிய வீடியோ பரபரப்பு

இப்படி பதற்றத்தை ஏற்படுத்தியவர்கள் மீது வேறு யாரேனும் வழக்கு தொடர்ந்தாலும் அந்த வழக்கின் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறது நீதிமன்றம்.

அப்படித்தான் கங்கனாவுக்கு எதிராக சினிமா பிரமுகர் முனாவர் அலி, மும்பை பாந்திரா மெட்ரோபாலிட்டன் மாஸிஸ்திரேட் கோர்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கோர்ட், கங்கனா ரணாவத் மீது வழக்குபதிவு செய்து விசாரிக்குமாறு பாந்திரா போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தது. இதையத்து கங்கனா ரணாவத் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது பாந்திரா போலீஸ்.

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருந்த தலைவிக்கு இதனால் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் கங்கனா விசாராணைக்காக செல்வதால் ஒருவாரத்துக்கான ஷூட்டிங் ஷெட்யூல் முழுவதும் கேன்சல் செய்யப்பட வேண்டியம் சூழல் ஏற்பட்டது. இப்போது விசாரணை முடிந்துவிட்டதால் இறுதிகட்ட படப்பிடிப்பில் அவர் கலந்துகொண்டுள்ளார்.

இந்த ஜெயலலிதா லுக்கில் வருவதற்காகத்தான் அவர் அமெரிக்கா சென்றாராம். அமெரிக்காவில் ஜேசன் காலின்ஸ் எனும் ஹாலிவுட் மேக்கப் மேனிடம் பிராஸ்தெடிக் மேக்கப் செய்து ஜெயலலிதா லுக்கிற்கு வந்தாராம் கங்கனா.

https://twitter.com/KanganaTeam/status/1332230705296723973