ஆடல்,பாடலுடன் பிரிவு உபச்சார விழா: புதுவாழ்வை தொடங்கும் காவன்

ஆடல்,பாடலுடன் பிரிவு உபச்சார விழா: புதுவாழ்வை தொடங்கும் காவன்

காவனின் 35 ஆண்டுகால போராட்டம் முடிவுக்கு வருகிறது. இனி பாகிஸ்தானை விட்டு கம்போடியாவில் புது வாழ்க்கையை தொடங்க இருக்கிறது. காவனை பிரி்ய மனமில்லை என்றாலும் காவனில் நலனில் அக்கறை கொண்ட விலங்குகள் ஆர்வலர்கள் ஆடல், பாடலுடன் பிரிவு உபச்சார விழா நடத்தி காவனை விமானத்தில் வழி அனுப்ப ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

ஆடல்,பாடலுடன் பிரிவு உபச்சார விழா: புதுவாழ்வை தொடங்கும் காவன்

இலங்கை காடுகளில் 7500க்கும் மேற்பட்ட யானைகள் இருந்தும், காட்டழிப்பினால் உணவு ஊருக்குள் வந்து குப்பை மேடுகளில் பேப்பர் திண்ணும் அவலத்திற்கு தள்ளப்பட்டிருக்கின்றன அந்த யானைகள். அந்த நாடு, யானைகளே இல்லாத நாடான பாகிஸ்தானுக்கு வழங்கிய யானையும் தனிமையில் மன நலம் பாதித்து, நீதிமன்றத்தின் உத்தரவினால் கம்போடியாவுக்கு இடமாற்றம் செய்யப்படுகிறது.

ஆடல்,பாடலுடன் பிரிவு உபச்சார விழா: புதுவாழ்வை தொடங்கும் காவன்

பாகிஸ்தானில் யானைகளே இல்லை என்பதால் அந்த நாட்டுக்கு 1985ம் ஆண்டு ஒரு வயதுடைய காவன் எனும் யானையை பரிசாக வழங்கியது இலங்கை. அந்த யானைக்கு துணையாக சஹோலி எனும் பெண் யானையையும் 1990ல் வழங்கியது இலங்கை.

பாகிஸ்தானின் வெப்பநிலை தாங்க முடியாமல் கடந்த 2012ல் சஹோலி உயிரிழந்தது. சஹோலியின் பிரிவினாலும் அதிக வெப்பநிலையினாலும் வாடி வந்த காவன், மனநிலை மிகவும் பாதிப்படைந்தது. இதனால் சாதுவாக இருந்த காவன் 2015ம் ஆண்டில் மூர்க்கத்தனமாக மாறியது. அதனால் காவனை சங்கிலியால் கட்டி வைத்தனர்.

ஆடல்,பாடலுடன் பிரிவு உபச்சார விழா: புதுவாழ்வை தொடங்கும் காவன்

தனிமையின் விரக்தியினால் காவன் அடிக்கடி சுவற்றை முட்டிக்கொண்டு நிற்பது வழக்கம். அதை விலங்குகள் ஆர்வலர் ஒருவர் போட்டோ எடுத்து வெளியிட, உலகம் முழுவதும் அந்த போட்டோ பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ஆடல்,பாடலுடன் பிரிவு உபச்சார விழா: புதுவாழ்வை தொடங்கும் காவன்

இதையடுத்து காவனை விடுவிக்க உலகம் முழுவதும் இருந்து குரல்கள் வலுத்தது. காவனை விடுவிக்க கோரி பாகிஸ்தான் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதிகளின் உத்தரப்படி காவனை கம்போடியா சரணலாயத்தில் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆடல்,பாடலுடன் பிரிவு உபச்சார விழா: புதுவாழ்வை தொடங்கும் காவன்

இதற்காக விமானம் மூலம் நாளை பாகிஸ்தானில் இருந்து கம்போடியா செல்கிறது.

ஆடல்,பாடலுடன் பிரிவு உபச்சார விழா: புதுவாழ்வை தொடங்கும் காவன்

35 வருட போராட்டத்திற்கு பின்னர் புதுவாழ்கை தொடங்கப்போகும் காவனுக்கு ஆடல், பாடலுடன் பிரிவு உபச்சார நிகழ்வு நடத்துவதற்காக ஏற்பாடுகளை செய்து வருகின்றனர் பாகிஸ்தானில் உள்ள விலங்குகள் ஆர்வலர்கள்.