புலிகள் பயங்கரவாதிகள் தானே? -இந்த கேள்விக்கு அவர் கொடுத்த பதிலடி

 

புலிகள் பயங்கரவாதிகள் தானே? -இந்த கேள்விக்கு அவர் கொடுத்த பதிலடி

அரசியலில் ஓர் அதிசயமாக வாழ்ந்தவர் வி.பி.சிங். 2.12.1989 முதல் 10.11.1990 வரையிலான 11 மாதங்கள் 8 நாட்கள் மட்டுமே இந்தியாவின் பிரதமராக இருந்தவர் வி.பி.சிங் என்று அழைக்கப்படும் விஸ்வநாத் பிரதாப் சிங். ஆனால், அந்த 11 மாத ஆட்சியிலும் அவர் நிகழ்த்திய அற்புதங்கள்தான் இன்றளவும் அவரை கொண்டாடி வைக்கிறது.

தனக்கு முன் இருந்த 6 பிரதமர்கள் செய்ய முடியாததை இந்தியாவின் ஏழாவது பிரதமரான வி.பி.சிங் செய்துகாட்டினார். உயர் வகுப்பில் பிறந்தாலும் பிற்படுத்தப் பட்டவர்களுக்கான 27 சதவிகித இட ஒதுக்கீட்டினை செயல்படுத்தி காட்டி, இடஒதுக்கீட்டின் நாயகன் என்று போற்றப்படுகிறார். இந்த ஒரு காரணத்தினாலேயே தன்னுடைய பிரதமர் பதவியை இழந்தாலும், மீண்டும் பிரதமராகும் வாய்ப்பு வந்தபோதும் அதை வேண்டாம் என்று மறுத்த அதியசமான அரசியல்வாதி வி.பி.சிங்.

புலிகள் பயங்கரவாதிகள் தானே? -இந்த கேள்விக்கு அவர் கொடுத்த பதிலடி

தமிழர்கள் மீதும் தமிழகம் மீதும் அளவுகடந்த அன்பு செலுத்திய வி.பி.சிங்கின் முழுப்பெயரான விஸ்வநாத் பிரதாப் சிங் என்ற பெயரினை பலருக்கும் சூட்டி வருகிறார் திராவிட இயக்க தலைவர் கி.வீரமணி.

மத்தியில் இணை, துணை அமைச்சர்களாக மட்டுமே தமிழர்கள் இருந்த நிலையில் முரசொலி மாறனுக்கு கேபினட் அமைச்சர் கொடுத்து தமிழகத்திற்கு முக்கியத்துவம் தந்தவர் வி.பி.சிங்.

ஈழத்தில் தமிழர்களை கொன்று குவித்த அமைதிப்படை திரும்ப பெற்றதன் மூலம் தமிழர்கள் அவரை கொண்டாடினர். இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி அமைச்சரவையிலும் முக்கிய பொறுப்புகளை வகித்திருந்தவர் வி.பி.சிங். அவரிடம், புலிகள் பயங்கரவாதிகள்தானே? என்ற கேள்விக்கு, ‘’யார் யார் பயங்கரவாதிகள் என்று அடையாளம் கண்டு முத்திரை குத்த என்னிடம் அந்த ரப்பர் ஸ்டாம்ப் இல்லை’’என்று சொல்லி பதிலடி கொடுத்தவர்.
காவிரி நடுவர் மன்றம் அமைக்க உத்தரவிட்டு, தமிழக விவசாயிகள் நெஞ்சில் பால்வார்த்தவர். பிற்படுத்தப்பட்டோருக்கான மண்டல் பரிந்துரையை அமல்படுத்தியவர்.

சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் நினைவுநாளான இன்று தமிழகத்தின் பிற தலைவர்களும் அவரை வாழ்த்தி வருகின்றனர். உயர் வகுப்பில் பிறந்தாலும் அடித்தட்டு மக்களின் மேன்மைக்காக உழைத்தவர் #VPSingh. தமிழ் மண்ணின் சமூகநீதியை அகில இந்தியாவுக்கும் பரவலாக்கிய அவரது நினைவுநாளில், அனைத்துத் துறையிலும் #Reservation என்ற சமூகநீதி இலக்கை அடைய சபதம் ஏற்போம் என்று தெரிவித்திருக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.