குப்பை மேட்டில் மேயும் யானைகள்… காட்டழிப்பின் அவலம்

 

குப்பை மேட்டில் மேயும் யானைகள்… காட்டழிப்பின் அவலம்

சட்டென்று பார்க்கும்போது குப்பை மேட்டில் பன்றிகள் மேய்ந்துகொண்டிருப்பதை போலவே இருக்கும். கொஞ்சம் நிதானித்து பார்ப்பவர்கள் அதிர்ந்துதான் போவார்கள்.

கும்பை கிடங்கை கிளறி பாலித்தீன், பிளாஸ்டிக் எல்லாம் திண்ணும் யானை கூட்டத்தை பார்த்து ஜீரணித்துக்கொள்ள வெகு நேரம் ஆகும். ஆனால், அதை சாப்பிடும் யானைகள் செரிமாணம் ஆகாமல் உடல் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் அவலம் இருக்கத்தான் செய்கிறது.

இலங்கை காடுகளில் 7500க்கும் மேற்பட்ட யானைகள் வசித்து வருகின்றன. காட்டழிப்பு அதிகமாகிக்கொண்டே இருப்பதால் யானைகள் தங்களின் வசிப்பிடத்திற்காகவும், உணவு தேவைக்காகவும் அலைய வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவை அடிக்கடி ஊருக்குள் நுழைவதால் யானை -மனித மோதல்கள் நடக்கின்றன.

குப்பை மேட்டில் மேயும் யானைகள்… காட்டழிப்பின் அவலம்

இலங்கை அம்பாறை மாவட்டத்தில் ஒருநாளைக்கு 150 டன் வரையிலான குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இவற்ரை அஷ்ரப் நகரில் உள்ள கும்பை மேட்டில் கொட்டுக்கி வைக்கின்றனர்.

உணவு தேடி வரும் யானைகள் இந்த குப்பை மேட்டை கிளறி, அழுகிய காய்கறிகள், அழுகிய உணவுகளை சாப்பிடுகின்றன. அப்படியே பேப்பர், பிளாஸ்டிக், பாலிதீனையும் சாப்பிட்டு விடுகின்றன.

இதனால் யானைகளுக்கு ஏற்படும் தீங்குகளை நினைத்து சமூகர் ஆர்வலர்கள் கவலை கொண்டுள்ளர். கடந்த வருடத்தில் மட்டும் 361 யானைகள் உயிரிழந்து போயிருப்பதால் இந்த காரணமாகவும் இருக்கலாம் என்று அவர்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

குப்பை மேட்டை சுற்றி மின்சார வேலிகள் அமைத்து வைத்தாலும் யானைகள் அவற்றை பெயர்த்து வீசிவிட்டு வந்துவிடுகின்றன என்பதால், குப்பை மேட்டை சுற்றிலும் அகழி அமைத்து வருகிறது அரசு.

அகழி அமைப்பதால் யானைகள் கும்பை மேட்டுக்கு வருவதை தடுக்கலாம். ஆனால், உணவு தேடி வருவதற்கு காரணமான காட்டழிப்புக்கு அரசு வழி செய்யாதா என்றே கேள்வி எழுப்புகின்றனர் சமூக ஆர்வலர்கள்.