இது ஒரு அரசியல் கட்சி விமர்சனம் அல்ல.. கற்பனையே! வலைத்தளங்களை தெறிக்கவிடும் வைரல் வீடியோ

 

இது ஒரு அரசியல் கட்சி விமர்சனம் அல்ல.. கற்பனையே! வலைத்தளங்களை தெறிக்கவிடும் வைரல் வீடியோ

மிகவும் பரபரப்பாக சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகிறது. அந்த வீடியோவின் ‘பொறுப்பு துறப்பு’வில், பின்வரும் காட்சிகள் யாவும் முழுக்க முழுக்க கற்பனையே. எந்த ஒரு அரசியல் கட்சியையோ, அதன் தலைவரையோ குறிப்பிடுபவை அல்ல என்று சொன்னாலும், அது அரசியல் கட்சி பற்றிய விமர்சனம் என்றும், அது எந்த கட்சியை, எந்த தலைவரை பற்றியது எனவும் ஒவ்வொரு காட்சியும் உணர்த்துகிறது.

இது ஒரு அரசியல் கட்சி விமர்சனம் அல்ல.. கற்பனையே! வலைத்தளங்களை தெறிக்கவிடும் வைரல் வீடியோ

டீமுக்காக பாடுபட்டவர்கள் எத்தனையோ பேர் இருக்க, டீமுல திறமையானவர்கள் எத்தனையோ பேர் இருக்க, கொஞ்சமும் திறைமை இல்லாத ஒருவர் கேப்டன் பதவிக்கு ஆசைப்படுற மாதிரி அந்த வீடியோ காட்சிகள் அமைந்திருக்கிறது. கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து இந்த வீடியோ எடுக்கப்பட்டிருந்தாலும், ராமச்சந்திரன், கோபால்சாமி, துரை, ராசா என்று வரும் பெயர்களும், கேப்டன் பதவிக்கு அடித்துக்கொள்ளும் நபரும் யார் என்பதும், இது வெறு விளையாட்டு அல்ல, தமிழகத்தின் ஒரு பெரும் கட்சியை பற்றிய விமர்சனம் என்பதும் தெரியவருகிறது.

மேலும், அந்த கிரிக்கெட் டீமின் உடை கருப்பு -சிவப்பு என்று இருப்பதும் அந்து எந்த கட்சி என்பதையும் தெரியப்படுகிறது.

இது ஒரு அரசியல் கட்சி விமர்சனம் அல்ல.. கற்பனையே! வலைத்தளங்களை தெறிக்கவிடும் வைரல் வீடியோ

அந்த வீடியோவில் இரண்டு சிறுவர்களுக்குள் இப்படி வாக்குவாதம் நடக்கிறது….

’’நான் தான் கேப்டன்..நான் தான் கேப்டன்…நான் தான் கேப்டன்..’’

’’என்ன கலாய்க்குறியா ஸ்டிரெய்ட்டா நான் தான் கேப்டன்னு சொன்னா எப்படி?’’

‘’எங்க அப்பா இந்த டீம் ஆரம்பிச்ச காலத்துல இருந்து ஆடிக்கிட்டு இருக்காரு. அப்போ அவருதான் கேப்டன். இப்ப நான் தான் கேப்டன்.’’

‘’இந்த டீமுக்காக நிறைய பேரு கஷ்டப்பட்டிருக்காங்க. ஆனா, உங்க அப்பாதான் யாருக்கும் பெயர் போக விடல. டீமுக்கு பேட் பால் வாங்க கலெக்ட் பண்ணுன காசை ஏன் ஆட்டைய போட்டேன்னு கேட்ட ராமச்சந்திரனையே வெளியே போகச்சொல்லிட்டாரு. அவரு நம்ம பசங்களை எல்லாம் கூட்டிக்கிட்டு போய் எத்தனை முறை நம்மளை கப் வாங்க விடாம அடிச்சிருக்காரு. இப்ப கூட 10 வருசமா அந்த டீம்கிட்டதான் கப் இருக்கு. சும்மா வாய் பேசாத..’’

‘’எங்க அப்பா இந்த டீமுக்காக எவ்வளவு நல்லா ஆடியிருக்காரு தெரியுமா?’’

‘’சரிப்பா ஒத்துக்கறேன். நீ என்ன ஆடியிருக்க…ஸ்டிரெய்ட்டா கேப்டன் ஆக?’’

’’எங்க அப்பாவோட எல்லா மேட்சையும் பார்த்திருக்கேன். அவருக்கு தண்ணி எடுத்துட்டு போய் கொடுத்திருக்கேன். பால் எடுத்து போட்டிருக்கேன்.’’

‘’தோ பாருடா..பால்பாயா இருந்தவங்க எல்லாம் பிளேயராக வரக்கூடாதுன்னு சொல்லல.. ஆனா பால்பாயாக இருந்ததே பிளேயராகுறதுக்கான தகுதின்னு சொல்லக்கூடாது..’’

’’நான் தான் இந்த டீமுக்கு வைஸ் கேப்டனாக இருந்தேன்.’’

‘’நீ வைஸ் கேப்டனாக இருந்ததுக்கு முன்னாடி கோபால்சாமின்னு ஒருத்தர் இருந்தார். அவருதான் அடுத்த கேப்டன்னு ஊரே சொன்னுச்சு. அவரையும் உங்க அப்பாதான் அடிச்சு விரட்டிட்டார்..’’

’’அதெல்லாம் எனக்கு தெரியாது. நான் தான் கேப்டன்.’’என்று சொல்ல, இடையில் இன்னொருவன் குறுக்கிட்டு, ‘’போன மேட்ச்ல எவ்வளவு அடிச்சோம்?’’ என்று கேட்க, ‘’போன மேட்ச்ல 86 ரன் அடிச்சோம். அப்புறம்.. இவன் 8 ரன்..அவன் ஒரு ரன். 86ம் 9ம் எவ்வளவு வருது.. 97’’என்று சொல்ல,

’’86ம் 9ம் எப்படிடா 97 வரும். ஸ்….அப்பா..வாத்தியார் பிள்ளை மக்குங்கிறது சரியா போச்சு.’’என்று சொல்ல,

‘’அதெல்லாம் கிடையாது நான் தான் கேப்டன்.’’என்று மீண்டும் சொல்ல,

‘’அடம் பிடிக்காத.. உன்னை விட துரை ரொம்ப அனுபவசாலி. அவர் கொஞ்ச நாள் கேட்படனாக இருக்கட்டும்.’’

‘’முடியாது….முடியாது’’

’’ஆல்ரவுண்டர் ராசா இருக்காரு. உன்னைவிட திறமைசாலி…’’

‘’ஒத்துக்க மாட்டேன்.. நான் தான் கேப்டன்’’

இது ஒரு அரசியல் கட்சி விமர்சனம் அல்ல.. கற்பனையே! வலைத்தளங்களை தெறிக்கவிடும் வைரல் வீடியோ

’’இந்த கேப்டன் பஞ்சாயத்தை விட்டுரு. நீ முதல்ல ஒரு பாலை அடி. இல்ல தொட்டுரு… அப்புறமாக கேப்டன் பஞ்சாயத்தை பேசிக்கலாம்…’’என்று சொல்ல,

‘’நான் தொட்டாலே 4, 6 தான்.. ‘’ என்று சொல்லிவிட்டு பேட் பிடிக்கிறார்.

ஆனா, வீசப்பட்ட பந்தை அடிக்க தெரியாமல் இருக்க, அந்த பந்து ஸ்டெம்ப்பில் பட்டு அவுட் ஆகிவிடுகிறார்.

ஆனால், அதற்கு பிறகும் அந்த சிறுவன், தன் தோல்வியை, தனக்கு திறமை இல்லாததை ஒத்துக்கொள்ளாமல் ‘’அதெல்லாம் எனக்கு தெரியாது நான் தான் கேப்டன்.’’ என்று சொல்லுவதோடு அந்த வீடியோ முடிகிறது.

வீடியோவின் முடிவில், ’தகுதியே இல்லாம அப்பா தயவுனால மட்டும் கேப்டன் ஆன ஒரு அரைவேக்காடு சொதப்ஸ் நமக்கு இனிமேலும் கேப்டனா வேணுமா?’ என்று சிலைடு போடுகிறார்கள்.

சமூக வலைத்தளங்களை தெறிக்கவிட்டிருக்கிறது இந்த வீடியோ.