ரெண்டு பேர் உரிமை கொண்டாடுவதால் வளர்ப்பு நாய்க்கு டி.என்.ஏ. சோதனை

 

ரெண்டு பேர் உரிமை கொண்டாடுவதால் வளர்ப்பு நாய்க்கு டி.என்.ஏ. சோதனை

ஒரு வளர்ப்பு நாய்க்கு ரெண்டு பேர் உரிமை கொண்டாடுவதால், அந்த வளர்ப்பு நாயும் அந்த ரெண்டு பேர் மீது பரிவு காட்டுவதால், நாயின் உரிமையாளர் யார் என்பதில் குழப்பமடைந்த போலீசார், கடைசியாக நாய்க்கு டி.என்.ஏ. சோதனை செய்வது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.

ம.பி.யில் ஹோஷங்கபாத்தை சேர்ந்த ஷதாப்கான், லேப்ரடார் இனத்தை சேர்ந்த நாயினை வளர்த்து வந்துள்ளார். அந்த நாய்க்கு ‘போக்கோ’என்று பெயர் வைத்தும் வளர்த்து வந்துள்ளார். க டந்த ஆகஸ்ட் மாதம் போக்கோ திடீரென்று காணாமல் போனதால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்த ஷதாப்கான், போலீசில் புகார் கொடுத்தார்.

ரெண்டு பேர் உரிமை கொண்டாடுவதால் வளர்ப்பு நாய்க்கு டி.என்.ஏ. சோதனை

புகார் கொடுத்து நாளில் இருந்து போலீஸ் தரப்பில் இருந்து போக்கோ குறித்த எந்த தகவலும் வராத நிலையில், தானே தனது போக்கோவை கண்டுபிடித்தார் ஷதாப்கான்.

மல்கேதி பகுதியில் கார்த்திக் ஷிவ்ஹரே வீட்டில் போக்கோ வளர்வது தெரிந்ததும், அங்கே சென்று தன் நாயை ஒப்படைக்குமாறு கேட்டுள்ளார். ஆனால், கார்த்திக் ஷிவ்ஹரே அது தன் நாய் என்று ஒப்படைக்க மறுத்துள்ளார்.

இதனால் போலீசில் சென்று புகார் கொடுத்திருக்கிறார். அகில பாரத வித்தியார்த்தி பரிசத் தலைவர் என்பதால் கார்த்திக் ஷிவ்ஹரே தனது செல்வாக்கை பயன்படுத்தி போலீசை அதிரவைத்திருக்கிறார். ஷதாப்கான் ஒரு பத்திரிகையாளர் என்பதால் அவரும் தனது செல்வாக்கை பயன்படுத்தி போலீசுக்கு அழுத்தம் கொடுத் திருக்கிறார். மேலும், நாயின் போட்டோக்கள், வீடியோக்கள் மற்றும் காணாமல் போன அன்று போலீசில் புகார் கொடுத்த புகார் காப்பி அனைத்தையும் ஆதாரமாக கொடுத்திருக்கிறர் ஷதாப்.

இதனால் நாய்க்கு உரிமை கொண்டாடும் இருவரையும் நிற்கவைத்து நாய் யார் பக்கம் போகிறது என்று பார்த்தனர் போலீசார். இருவர் மீதும் பரிவு காட்டி இருக்கிறது நாய்.

’போக்கோ’என்று ஷதாப் கூப்பிட்டதும் அவரிடம் ஓடியிருக்கிறது நாய். அதே நேரம், ‘டைகர்’ என கார்த்திக் கூப்பிட்டதும் அவரிடமும் ஓடி்யிருக்கிறது நாய்.

இதனால் போலீசார் குழம்பமடைந்துள்ளனர். பிறகு, நாய்க்கு டி.என்.ஏ. சோதனை செய்து அதன் மூலம் உரிமையாளர் யார் என்ற முடிவுக்கு வரலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.