நமீதாவின் மூக்குடைத்த அமித்ஷா

 

நமீதாவின் மூக்குடைத்த அமித்ஷா

இரண்டு நாள் பயணமாக நேற்று மதியம் சென்னை வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று காலை 11 மணிக்கு மேல் டெல்லி புறப்பட்டுச்சென்றார்.

நேற்று மாலையில் கலைவாணர் அரங்கத்தில் நடந்த அரசு விழாவில் பங்கேற்ற பிறகு லீலா பேலஸ் ஓட்டலில் சென்று தங்கினார் அமித்ஷா. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் லீலா பேலஸ் சென்று அமித்ஷாவை சந்தித்தனர். இந்த சந்திப்பு 20 நிமிசங்களுக்கு மேலாக நீடித்தது.

நமீதாவின் மூக்குடைத்த அமித்ஷா

பின்னர், தமிழக பாஜக மாவட்ட நிர்வாகிகளுடனான கலந்துரையாடலில் மனம் விட்டு பேசி்யிருக்கிறார் அமித்ஷா.

கூட்டணி பற்றி பலரும் பேசியபோது, அதை நான் முருகனிடம் பேசி முடிவெடுத்துக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு, கட்சியை வளர்ப்பது பற்றி பேசுவோம் என்று சொல்லிவிட்டு, பாஜகவை பொறுத்தவரைக்கும் தமிழ்நாடு ரொம்ப முக்கியமான ஒன்று. அதற்காகத்தான் தமிழ்நாட்டில் பாஜகவை வலுவாக நிலைநிறுத்த இத்தனை பாடுபடுகிறோம் என்று சொன்னவர்,

நமீதாவின் மூக்குடைத்த அமித்ஷா

தமிழகம் ஏன் முக்கியம்னு சொல்றேன்னா…ரெண்டு முறை தொடர்ச்சியா ஆட்சிக்கு வந்துட்டோம். இன்னும் 30 வருசத்துக்கு ஆட்சி நீடிக்கணும். அப்படி 30 வருசத்துக்கு ஆட்சி நீடிக்கணும்னா தென்மாநிலங்களோட ஆதரவு ரொம்ப அவசியம். அதுல தமிழகம் ரொம்ப முக்கியம். தமிழகத்துல கட்சியை பலப்படு்த்த நீங்க எல்லா முழு மூச்சோடு உழைக்கணும்னு அமித்ஷா சொல்லிக் கொண்டிருந்தபோது,

நடிகை நமீதா எழுந்து, பாஜகவுக்குன்னு தமிழ்நாட்டுல தனியா ஒரு டிவி ஆரம்பிக்கணும். அப்பத்தான் பிரச்சாரத்தை ஸ்டிராங் பண்ண முடியும்னு சொல்ல,

டிவி, டிவி விவாதத்தை வச்சு பெருசா எதுவும் பண்ணிட முடியாது. நேரடியா களத்துல இறங்கி வேலை செய்யணும். முதல்ல..அடுத்தவங்க வேலையில மூக்கை நுழைக்காம அவுங்கவுங்களுக்கு ஒதுக்குன வேலையை ஒழுங்கா செஞ்சாலே கட்சி வளர்ந்தும்னு சொல்லி நமீதாவை நோஸ்கட் செய்திருக்கிறார் அமித்ஷா.