ஜெயக்குமாரை வெளியே அனுப்பிவிட்டு ஈபிஎஸ் -ஓபிஎஸ்சிடம் பேசிய அமித்ஷா

 

ஜெயக்குமாரை வெளியே அனுப்பிவிட்டு ஈபிஎஸ் -ஓபிஎஸ்சிடம் பேசிய அமித்ஷா

குடியரசுத்தலைவருக்கும், பிரதமருக்கும் அளிக்கும் வரவேற்பை உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு நேற்று விமான நிலையத்தில் அதிமுக அளித்தது என்றால், பாஜகவின் முக்கிய முடிவுகளை எடுக்கும் நபர் அவர் என்பதால்தான்.

முதல்வர், துணைமுதல்வர், அமைச்சர்கள் அனைவரும் சென்று விமான நிலையத்தில் வரவேற்பு அளித்தனர்.

கலைவாணர் அரங்கில் நடந்த அரசு விழாவுக்கு முன்பாக, லீலா பேலஸ் ஓட்டலில் தங்கி்யிருந்த அமித்ஷாவை சென்று சந்தித்தார் அமைச்சர் ஜெயக்குமார். பாஜகவையும், அமித்ஷாவையும் அதிகம் விமர்சித்து வந்ததால் அதை சரிக்கட்டும் நோக்கில்தான் இந்த சந்திப்பு நிகழ்ந்ததாதகவும் சொல்லப்பட்டது.

ஜெயக்குமாரை வெளியே அனுப்பிவிட்டு ஈபிஎஸ் -ஓபிஎஸ்சிடம் பேசிய அமித்ஷா

இதன்பின்னர் கலைவாணர் அரங்கில் நடந்த அரசு விழாவுக்கு பின்னர் லீலா பேலஸ் ஓட்டலில் தங்கிய அமித்ஷாவை பார்க்க, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் சென்றனர். அவர்களுடன் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரும் சென்றார்.

ஓட்டலுக்கு சென்ற சிறிது நேரத்தில் மூவரும் அமித்ஷா அறைக்குள் அழைக்கப்பட்டனர். ஆனால், சுவற்றில் அடித்த பந்தாக போன வேகத்திலேயே வெளியே வந்துவிட்டார் அமைச்சர் ஜெயக்குமார். அதன்பிறகு ஈபிஎஸ் -ஓபிஎஸ்சுன் இருபது நிமிச்சத்துக்கு மேலாக ஆலோசனை செய்திருக்கிறார் அமித்ஷா.

ஜெயக்குமாரை வெளியே அனுப்பிவிட்டு ஈபிஎஸ் -ஓபிஎஸ்சிடம் பேசிய அமித்ஷா

பீகார் தேர்தலில் பாஜகவின் வெற்றியைப்பற்றி சொல்லி ஈபிஎஸ்சும் ஓபிஎஸ்சும் வாழ்த்துச்சொல்ல, அதுபற்றியே அதிகம் பேசியிருக்கிறார் அமித்ஷா. பீகார் தேர்தலில் உங்களின் பங்களிப்பை போலவே தமிழக சட்டமன்ற தேர்தலிலும் அளிக்க வேண்டும் என்று ஈபிஎஸ் கேட்க, ‘நிச்சயமாக’ என்று உறுதி அளித்திருக்கிறார் அமித்ஷா.

சந்திப்பு முடியும் தருணத்தில்தான் அந்த வார்த்தயை சொல்லி இருக்கிறார் அமித்ஷா. புறப்படுவதற்காக எழுந்து நின்ற ஈபிஎஸ் -ஓபிஎஸ் இருவரையும் பார்த்து, எப்போதும் நீங்க ரெண்டு பேரும் இதுமாதிரியே ஒன்றாக இருக்கணும்னு விரும்புறேன் என்று சொல்லிவிட்டு, பாஜகவுக்கு ஒதுக்கும் தொகுதிகள் எத்தனை என்று ஜனவரி மாசத்துக்குள்ள சொல்லிடுங்க..என்றிருக்கிறார்.