ஸ்டாலின் திருநீரு சர்ச்சை…சரிக்கட்டிய உதயநிதி

 

ஸ்டாலின் திருநீரு சர்ச்சை…சரிக்கட்டிய உதயநிதி

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய போது வழங்கப்பட்ட திருநீரை நெற்றியில் பூசிக்கொள்ளாமல், கொஞ்சமாக எடுத்து கழுத்தில் பூசிவிட்டு, மீதியை கீழே கொட்டியதால், அது என்ன டால்கம் பவுடரா? என்று கொந்தளித்தனர். ஸ்டாலின் செயலுக்கு தேவர் சமுதாய மக்கள் தொடர்ந்து கண்டனங்களை தெரிவித்து வந்தனர். திருநீரை அவமதித்ததால் இந்து மதத்தினர் அவருக்கு எதிரான கண்டனங்களை பதிவு செய்து வந்தனர்.

ஸ்டாலின் திருநீரு சர்ச்சை…சரிக்கட்டிய உதயநிதி

தந்தை ஸ்டாலின் ஏற்படுத்திய இந்த சர்ச்சையை ஓரளவுக்கு சரிக்கட்டியிருக்கிறார் மகன் உதயநிதி ஸ்டாலின்.

ஸ்டாலின் திருநீரு சர்ச்சை…சரிக்கட்டிய உதயநிதி

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் இருக்கும் உதயநிதி ஸ்டாலின், மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனத்தின் 27-ஆவது குரும காசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரியார் சுவாமிகளை ஆதீனத்தில் நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றார். பிரச்சார பயணம் வெல்ல, உதயநிதி நெற்றியில் திருநீரு பூசி வாழ்த்திய ஆதீனம், 1972ஆம் ஆண்டில் உதயநிதியின் தாத்தா கருணாநிதி, தருமபுரம் ஆதீனம் 26வது குருமகா சந்நிதானத்தை சந்தித்து ஆசி பெற்ற புகைப்படத்தினை உதயநிதிக்கு வழங்கினார்.