நயன்தாரா குழந்தையா?சிறுமியா? அமைச்சரின் பேச்சால் சலசலப்பு

 

நயன்தாரா குழந்தையா?சிறுமியா? அமைச்சரின் பேச்சால் சலசலப்பு

தனியார் கல்லூரிகளில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை திமுக ஏற்கும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்த பின்னர், கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்ததால், திமுகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். முதலிலேயே முதல்வர் அறிவிக்காதது ஏன்? என்றும், திமுக அறிவித்த பிறகுதான் அதிமுக அரசு செய்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் வழியில்தான் அதிமுக அரசு நடக்கிறதா? என்றும் ஏளனம் செய்து வருகிறார்கள்.

நயன்தாரா குழந்தையா?சிறுமியா? அமைச்சரின் பேச்சால் சலசலப்பு

இளைஞரணி செயலாளர் உதயநிதியும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களின் கட்டணத்தை கழகமே ஏற்குமென தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். நாம் செய்யும் நல்லதை காப்பியடித்து பழகிய எடுபுடிஜி இதையும் விடவில்லை.’’என்று விமர்சித்திருக்கிறார்.

நயன்தாரா குழந்தையா?சிறுமியா? அமைச்சரின் பேச்சால் சலசலப்பு

இதனால் எரிச்சலான அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, ஸ்ரீவில்லிபுத்தூர் தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் பேசியபோது, ‘’உதயநிதி ஸ்டாலினுக்கும் ஒரு பெரிய பிரச்சினை வருகிறது. அவர் மீது நயன்தாரா புகார் கொடுக்க போகிறார். உதயநிதி ஸ்டாலின், போக்சோ சட்டத்தில் உள்ளே போகப் போகிறார்’’என்று சொன்னதும், அங்கிருந்த அதிமுகவினர் அதிர்ச்சியாகினர்.

குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டமே போக்சோ. அந்த சட்டத்தில் உதயநிதி மீது வழக்கு என்றால், நயன்தாரா என்ன குழந்தையா?இல்லை சிறுமியா? என்று கூட்டத்தினர் கேட்டுக்கொண்டதால் சலசலப்பு உண்டானது.