சிக்கலின் பன்முகத் தீவிரத்தன்மையை ஏற்று ஆளுநரை சந்திக்க வேண்டும்.. முதல்வருக்கு மணியரசன் கடிதம்

 

சிக்கலின் பன்முகத் தீவிரத்தன்மையை ஏற்று ஆளுநரை சந்திக்க வேண்டும்.. முதல்வருக்கு மணியரசன் கடிதம்

சிக்கலின் பன்முகத் தீவிரத்தன்மையை ஏற்று, பேரறிவாளன் விடுதலைக்கு உரிய ஏற்பாடு செய்யுமாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தமிழ்த் தேசியப் பேரியக்கம் தலைவர் பெ.மணியரசன் கடிதம் எழுதி இருக்கிறார்.

‘’ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறையிலிருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்திட தங்கள் அமைச்சரவை 09.09.2018 அன்று நிறைவேற்றி அனுப்பிய பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்காமல், தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நிரந்தரமாக நிலுவையில் வைத்திருப்பது சட்ட முரண்பாடுகளையும் மனித உரிமைச் சிக்கலையும் ஏற்படுத்தி இருக்கிறது’’என்று குறிப்பிடப்பட்டிருக்கும் அக்கடிதத்தில்,

சிக்கலின் பன்முகத் தீவிரத்தன்மையை ஏற்று ஆளுநரை சந்திக்க வேண்டும்.. முதல்வருக்கு மணியரசன் கடிதம்

’’பேரறிவாளன் தமது விடுதலைக்காக உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு 03.11.2020 அன்று விசாரணைக்கு வந்தபோது, மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் தலைவரான நீதிபதி நாகேசுவரராவ், ஏழு பேர் விடுதலைக்கும் சட்ட ஞாயம் இருப்பதை உறுதிபடக் கூறியுள்ளார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பன்னாட்டுச் சதி குறித்த MDMA விசாரணை முடியவில்லை என்று கூறுவது பொருத்தமற்ற காரணம் என்றும் தண்டிக்கப்பட்டு சிறையில் உள்ளோரை அந்த விசாரணை முடிவு கட்டுப்படுத்தாது என்றும் மூன்று நீதிபதிகள் அமர்வு தெளிவுபடுத்திவிட்டது’’என்றும்,

சிக்கலின் பன்முகத் தீவிரத்தன்மையை ஏற்று ஆளுநரை சந்திக்க வேண்டும்.. முதல்வருக்கு மணியரசன் கடிதம்

’’அரசமைப்பு உறுப்பு 161இன் கீழ் தமிழ்நாடு அமைச்சரவையின் பரிந்துரையை ஆளுநர் ஏற்காமல் இருப்பதற்குக் கடும் அதிருப்தியை நீதிபதி நாகேசுவரராவ் வெளியிட்டார். உறுப்பு 161ஐ செயல்படுத்த மறுத்தால், அரசமைப்பு உறுப்பு 142இன் கீழ் உச்ச நீதிமன்றமே அவர்களை விடுதலை செய்ய அதிகாரமிருக்கிறது என்பதையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டிவிட்டார்கள். எனவே தாங்கள் உடனடியாக ஆளுநரைச் சந்தித்து, அவரது ஒப்பம் பெற்று முதல் கட்டமாக பேரறிவாளனை விடுதலை செய்ய ஏற்பாடு செய்யுங்கள். இதன் வழியாக எஞ்சிய 6 பேர் விடுதலைக்கும் கதவு திறக்கும்!’’என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும், ‘’பேரறிவாளன் சிறுநீரகக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு நோய்த் தாக்கத்தினால் சிறையில் இருந்தவாறே சிகிச்சைப் பெற்று வருவதைத் தாங்கள் அறிவீர்கள்.

கட்சி வேறுபாடின்றி தமிழ்நாட்டு மக்களும் உலகெங்கும் வாழும் தமிழர்களும் பேரறிவாளன் விடுதலைக்குக் குரல் கொடுத்து வருவதைத் தாங்கள் அறிவீர்கள்.
அருள்கூர்ந்து தாங்கள் இந்தச் சிக்கலின் பன்முகத் தீவிரத்தன்மையை ஏற்று, பேரறிவாளன் விடுதலைக்கு உரிய ஏற்பாடு செய்யவேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.