அமித்ஷாவுக்கு அனுப்பிய அவசர மெயில்! அலட்சியப்படுத்தியதால் கொந்தளிக்கும் திமுக!

 

அமித்ஷாவுக்கு அனுப்பிய அவசர மெயில்! அலட்சியப்படுத்தியதால் கொந்தளிக்கும் திமுக!

தமிழகம் வரும் அமித்ஷா இன்று ‌ரூ.67,378 கோடி மதிப்பில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். 2ம் கட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை அமைக்கும் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் அமித்ஷா, கோவை – அவினாசி சாலையில் உயர்மட்ட சாலை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவதுதான் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.

அமித்ஷாவுக்கு அனுப்பிய அவசர மெயில்! அலட்சியப்படுத்தியதால் கொந்தளிக்கும் திமுக!

கோவை -அவினாசி திட்டம் தமிழக நெடுஞ்சாலைத்துறையின் திட்டமான இதன் மதிப்பு 1700 கோடி ரூபாய் ஆகும். ஐதராபாத்தை சேர்ந்த கே.என். ஆர். கஸ்க்ட்ரக்‌ஷன் நிறுவனத்திற்கு சாதகமான டெண்டரை ஒதுக்கீடு செய்யும் வகையில் டெண்டர் விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று கடந்த ஜூலை மாதத்திலேயே தமிழக நெடுஞ்சாலைத்துறை செக்ரட்டரி கார்த்திக் ஐஏஎஸ்சிடம், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரவி புகார் தெரிவித்துள்ளார். ஆனால், சர்ச்சைக்குரிய அந்த நிறுவனத்துக்கே டெண்டர் ஒதுக்கப்பட்டிருக்கிறது. நெடுஞ்சாலை துறைக்கு பொறூப்பு வகிக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அந்த டெண்டருக்கு ஒப்புதல் அளித்திருக்கிறார்.

அமித்ஷாவுக்கு அனுப்பிய அவசர மெயில்! அலட்சியப்படுத்தியதால் கொந்தளிக்கும் திமுக!

இதையடுத்து, இந்த பாலத்தின் ஊழல்களை சுட்டிக்காட்டிய ரவி, அடிக்கல் நாட்டு விழாவை தவிர்க்க வேண்டும் என்று அமித்ஷாவுக்கு மெயில் அனுப்பி இருக்கிறார்.

அமித்ஷா தமிழகம் வரும் இந்த சூழலில் இந்த மெயில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அமித்ஷா அடிக்கல் நாட்டுவதை தவிர்த்துவிடுவார் என்றே எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அமித்ஷா இன்று அந்த பாலத்திற்குஅடிக்கல் நாட்டுகிறார் என்று தெரிந்ததும், ’நெடுஞ்சாலைத் துறையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரூ.1,700 கோடி ஒப்பந்த ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு நிலுவையில் உள்ள கோவை – அவினாசி மேம்பாலத் திட்டத்துக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டுவது – ஊழலில் பாஜகவின் கூட்டணியை உறுதிபடுத்துகிறது!’என்று திமுக சார்பில் கண்டனங்கள் எழுந்திருக்கிறது.

அமித்ஷாவுக்கு அனுப்பிய அவசர மெயில்! அலட்சியப்படுத்தியதால் கொந்தளிக்கும் திமுக!

அமித்ஷா மீது கொந்தளிப்பில் உள்ள திமுகவினர் #GoBackAmitShah என்ற ஹேஷ்டேக்கினை இந்திய அளவில் டிரெண்டிங் ஆக்கி, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.