மனுஸ்மிருதியில் இருப்பது கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன் பழமொழியே – இயக்குநர் பேரரசு

 

மனுஸ்மிருதியில் இருப்பது கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன் பழமொழியே – இயக்குநர் பேரரசு

பெண்களை குறிவைத்துதான் நான் படங்கள் எடுப்பேன். பெண்களுக்கான படங்கள் எடுத்தால் நிச்சயம் அது ஆண்களுக்கும் பிடித்துவிடும் என்ற கணக்கில் தான் படங்கள் எடுப்பேன். பெண்களுக்கு மரியாதை கொடுத்து படங்கள் எடுக்கும் எனக்கு, பெண் குறித்து இழிவாக பேசியதை எப்படி பொறுக்க முடியும்? என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவனுக்கு எதிரான தனது கருத்தினை முன் வைத்திருக்கிறார் திரைப்பட இயக்குநர் பேரரசு.

‘’நான் பாஜகவிற்கு விரும்பி சென்றேன். நான் இந்து என்பதால் தாய் மதத்தின் மீது ஒரு ஈடுபாடு இருக்கும். பக்தி அடிப்படையில்தான் பிஜேபியில் சேர்ந்தேன். அதற்காக பிஜேபி இந்து கட்சி என்று சொல்லவில்லை. இந்து மதத்திற்கு எதிரான கட்சி கிடையாது. வேறு ஒரு விசயத்திற்காக நான்பிஜேபிக்கு சென்றேன். அப்புறமாக பிஜேபியில் சேர்ந்துட்டேன்’’ என்று சொல்லும் பேரரசு, திருமாவளவன் ஏற்படுத்திய சர்ச்சை குறித்து,

மனுஸ்மிருதியில் இருப்பது கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன் பழமொழியே – இயக்குநர் பேரரசு

’’மனுநீதி நூலினை எங்காவது பாடப்புத்தகத்தில் வைத்திருக்கிறார்களா? அந்த நூலை படித்துதான் வாழ்க்கை நடத்தணும் என்பது நடைமுறையில் இருக்குதா? மனுஸ்மிருதி வார்த்தை கூட மக்கள் புழக்கத்தில் இல்லை. புழக்கத்தில் இல்லாத ஆயிரம் வருசத்துக்கு முன்னாடி உள்ள நூலைபற்றி யாராவது திருமாவளவனிடம் விளக்கம் கேட்டார்களா? அப்படி யாராவது விளக்கம் கேட்டு அதற்குஅவர் பதில் சொல்லி இருந்தால் கூட பரவாயில்லை.

மனுநூலில் எங்கோ ஓரத்தில் இருக்கும் ஒன்றை படித்து சொல்கிறார். அது கூட, ’கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன்’ என்கிற பழமொழிதான். அதைத்தான் கொஞ்சம் மாற்றி சொல்லப்பட்டு இருக்கிறது. மொழிபெயரிப்பில் கொஞ்சம் சேர்த்திருக்காங்க. அதை விடுங்க. மகாபாரத்தில் பத்மினி தன்மையை பற்றி சொல்லி இருக்காங்க. அதை வச்சு கும்பிடுங்க. ஆனா, நீங்க மகாபாரதத்தையும் எரிக்குறீங்க. ராமருக்கும் செருப்பு மாலை போடுறீங்க’’என்று ஆவேசமாகிறார்.

மனுஸ்மிருதியில் இருப்பது கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன் பழமொழியே – இயக்குநர் பேரரசு

மேலும், ’’ஏதோ ஒரு வகையில் இந்து மதத்தை அசிங்கப்படுத்தணும். இழிவு படுத்தணும். அதுக்கு ஒரு காரணத்தை தேடி கண்டுபுடிச்சி பேசுறார். பிரதமர், ஜனாதிபதி, முதல்வர் உச்ச பதவியிலும் பெண்கள் வந்துவிட்டபிறகு பெண்ணடிமை என்பது எவ்வளவு கேலிக்கூத்தானது. அரசியல் ஆதாயத்துக்காகத்தான் இப்படி செய்கிறார் திருமாவளவன். நடைமுறை பிரச்சனைகள் ஆயிரம் இருக்கும்போது, லென்ஸ் வைத்து தேடி ஒரு சர்ச்சையை ஏற்படுத்துகிறார் திருமாளவன்’’ என்று திருமாளவனின் சர்ச்சைக்கு தனது எதிர்ப்பினை பதிவு செய்திருக்கிறார்.