அசிங்கப்படுத்துறது தெரியாம ரிப்ளை கொடுக்குறீங்களே… வறுபடும் பாஜக

 

அசிங்கப்படுத்துறது தெரியாம ரிப்ளை கொடுக்குறீங்களே…  வறுபடும் பாஜக

நூறுநாள் பிரச்சாரத்தை மேற்கொண்டிருக்கும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதிஸ்டாலின் நேற்று முன் தினம் திருச்சிக்கு சென்றார். பிரச்சாரத்திற்கு இடையில் கட்சியினர் இல்ல திருமணங்களிலும் பங்கேற்று வாழ்த்தி வருகிறார். திருச்சி தெற்கு மாவட்டம் திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய துணை செயலாளர் ஜெகதீசனின் புதல்வி, மணமகள் ப்ரீத்தி – மணமகன் நாகமணி ஆகியோரின் திருமணத்தை திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடத்தி வைத்து, மணமக்கள் நீடூழி வாழ வாழ்த்தினார்.

அசிங்கப்படுத்துறது தெரியாம ரிப்ளை கொடுக்குறீங்களே…  வறுபடும் பாஜக

அதே போல், மணப்பாறையில் திருச்சி(தெ) இளைஞரணி மா.துணை அமைப்பாளர் – ஒன்றிய கவுன்சிலர் சகோதரர் சக்தி பிரகாஷின் திருமண நிகழ்வில் பங்கேற்ற உதயநிதி, ’’மணமக்கள் மாநில அரசை போல் உரிமைகளை விட்டுக்கொடுக்காமல்-மத்திய அரசை போல் ஆதிக்கம் செலுத்தாமல் – ஒருவரை ஒருவர் புரிந்து நடக்க வேண்டும்’’என்று வாழ்த்தினார்.

அசிங்கப்படுத்துறது தெரியாம ரிப்ளை கொடுக்குறீங்களே…  வறுபடும் பாஜக

இதற்குபாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் செல்வம், “மணமகன் எனது தாத்தா கருணாநிதியை போல் அல்லது என் தந்தை ஸ்டாலினைப்போல் வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்” என்று சொல்லி வாழ்த்த வழியில்லையே வாழ்த்துவதற்குகூட பாஜகவைத்தான் துணைக்கு அழைக்க வேண்டியுள்ளது’’என்று டுவிட்டரில் பதில் கொடுத்திருக்கிறார். மேலும், #திமுககேடுதரும் என்ற ஹேஷ்டேக்கினையும் பகிர்ந்திருக்கிறார்.

திமுக இளைஞரணி உதயநிதி பாஜகவை தாழ்த்தி கமெண்ட் அடித்திருப்பது தெரியாமல், பாஜகவை பெருமையாக சொல்லியதாக நினைத்துக்கொண்டு பாஜக இளைஞரணி வினோஜ் செல்வம் பதில் கொடித்திருக்கிறாரே என்று, நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

அசிங்கப்படுத்துறது தெரியாம ரிப்ளை கொடுக்குறீங்களே…  வறுபடும் பாஜக

ஒருமுறைக்கு 10 முறை உதயநிதி டுவிட்டை படித்துவிட்டு பதில் சொல்லக்கூடாதா? என்று கேட்கின்றனர். உங்களைப்போல்(பாஜக) அல்லாமல் என்றுதான் வாழ்த்தி இருக்கிறார். அதை புரிந்துகொள்ள வேண்டும் என்றும், பாஜகவை போல் என்று வாழ்த்த அல்ல இந்த பாஜகவின் கொத்தடிமை அதிமுகவை போல் இல்லாமல் வாழுங்கள் என்று தான் வாழ்த்தியுள்ளார் என்று சொல்லி வரும் நெட்டிசன்கள், உங்களை அசிங்கப்படுத்துவது தெரியாமல் ரிப்ளை கொடுக்குறீங்களே என்று பாஜகவை போட்டு வறுத்தெடுக்கிறார்கள்.