இந்த வரவேற்பு தான் அலறச்செய்கிறது… உதயநிதி

 

இந்த வரவேற்பு தான் அலறச்செய்கிறது… உதயநிதி

2021 சட்டமன்ற தேர்தலில் ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என்ற தலைப்பில் தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்து செல்கிறது திமுக. மூத்த தலைவர் ஜனவரியில் இருந்து பிரச்சாரத்தை தொடங்க இருக்கும் நிலையி, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று முதல் தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.

கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையில் இருந்து அவர் பிரச்சாரத்தை தொடங்க ஏற்பாடுகள் நடந்த போது, அனுமதி இல்லை என்று போலீசார் எச்சரித்தனர். ஆனாலும், பிரச்சாரத்தை தொடங்க முற்பட்ட உதயநிதி உட்பட கட்சியினரை போலீசார் கைது செய்து மண்டபத்தில் தங்க வைத்து பின்னர் விடிவித்தனர். அதற்குள்ளாகவே, உதயநிதியின் கைதை கண்டித்து பல இடங்களில் திமுகவினர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்த வரவேற்பு தான் அலறச்செய்கிறது… உதயநிதி

திமுகவினர் தேர்தல் பணிகளை செய்யக்கூடாது என்பதற்காக வேண்டுமென்றே, அதிமுக அரசு இப்படி தடைபோடுவதாக தெரிவித்த உதயநிதி, திட்டமிட்டபடி பிரச்சாரம் தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவித்தார்.

இந்த வரவேற்பு தான் அலறச்செய்கிறது… உதயநிதி

இதுகுறித்து அவர் மேலும், எல்லா உரிமைகளையும் அடகு வைத்து தமிழகத்தை பாழ்படுத்திய அடிமைகளை விரட்டவே விடியலைநோக்கி ஸ்டாலினின்குரல் பிரச்சார பயணம். திருக்குவளையில் முத்தமிழறிஞர் இல்லத்தில் கழக கொடியேற்றி-பயணம் குறித்து பத்திரிகையாளர்களிடம் விளக்கினேன். எந்த தடை வந்தாலும் தமிழகம் மீட்கும் இப்பயணம் தொடரும் என்றிருக்கிறார்.

பிரச்சார பயணத்தின்போது, ஆங்காங்கே காரை நிறுத்தி கட்சியினரையும் , மக்களையும் சந்தித்தி பேசி வருகிறார் உதயநிதி.

இந்த வரவேற்பு தான் அலறச்செய்கிறது… உதயநிதி

திருக்குவளையில் அஞ்சுகத்தம்மாளுக்கும், கருணாநிதிக்கும் மலர்தூவி மரியாதை செய்தது போலவே, நாகை தலைஞாயிறு ஒன்றியம் முன்னாள் எம்.எல்.சி மறைந்த திரு.மீனாட்சிசுந்தரம் இல்லத்துக்கு சென்று அவரது உருவப்படத்துக்கு மரியாதை செலுத்திய உதயநிதி, மீனாட்சிசுந்தரம் குடும்பத்தார் மற்றும் JACTO-GEO நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.

போகும் வழியில் விவசாயிகள் உதயநிதிக்கு வரவேற்பு அளித்தனர். அதுகுறித்து, ‘’விவசாயிகள் – விவசாய தொழிலாளர்கள் நிறைந்த கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதியில் சிறப்பான வரவேற்பினை அளித்த அண்ணன்கள் நாகை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் என்.கவுதமன், சட்டமன்ற உறுப்பினர் உ.மதிவாணன் மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்களுக்கு நன்றி’’என்று நெகிழும் உதயநிதி, ‘’ திருக்குவளை அருகே நடவுப்பணியில் இருந்த வேளாண் பெருங்குடி மக்கள் எங்களை நோக்கி கையசைத்து வரவேற்றனர். அப்போது காரை நிறுத்தி அவர்களை சந்தித்து உரையாடினேன். எளிய மக்களிடம் கழகத்திற்கு கிடைக்கும் இந்த வரவேற்பு தான் அடிமைகளை அலறச்செய்கிறது’’என்கிறார்.