Home Uncategorized குருதியை கொடையாகத் தர உரிமையோடு அழைக்கின்றேன்... சீமான்

குருதியை கொடையாகத் தர உரிமையோடு அழைக்கின்றேன்… சீமான்

தமிழ்த் தேசிய இனத்தின் முகமாக முகவரியாக விளங்கும் தன்னிகரில்லா தமிழ்த்தேசியத் தலைவர், என்னுயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் பிறந்தநாளான நவம்பர் 26 அன்று, உலகெங்கும் பரவி வாழும் தாய்த்தமிழ் உறவுகள் அந்நாளை சிறப்பாகக் கொண்டாடத் தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில், நாம் தமிழர் கட்சி சார்பாகச் சிறப்பான முன்னெடுப்புகளை எப்போதும் போலத் தொடங்கியிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.

அவர் மேலும், ‘’ஒவ்வொரு ஆண்டும் தலைவர் பிறந்த நாளினை தமிழர் எழுச்சி நாளாகப் போற்றி, இன விடுதலைக்குச் சூளுரைக்க உறுதியேற்கும் விதமாக நாம் தமிழர் கட்சியின் மருத்துவர் பாசறை மற்றும் குருதிக்கொடைப் பாசறை இணைந்து, தமிழகமெங்கும் முன்னெடுத்துவரும் குருதிக்கொடை வழங்கும் நிகழ்வுகளில் இவ்வாண்டும் நாம் தமிழர் கட்சியின் உறவுகள் பெருந்திரளாக உணர்வெழுச்சியுடன் பங்கேற்க வேண்டுமென அழைப்பு விடுக்கிறேன்’’என்று வேண்டுகோள் விடுத்துள்ள சீமான்,

’’தொற்றுநோய் பேரிடர் காலமான இக்காலத்தில் பெரும் புகழ் கொண்ட நம் தலைவரின் பிறந்தநாளில் நாம் வழங்கும் குருதி பல்லாயிரக்கணக்கான ஏழை, எளிய மக்களின் உயிர் காக்க உதவுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திலேயே அதிகக் குருதிக்கொடை தருகிற அரசியல் அமைப்பாக நாம் தமிழர் கட்சி தான் திகழ்கிறது எனக் குருதிக்கொடை பெறுகிற தொண்டார்வ நிறுவனங்கள் புள்ளி விபரங்களோடு தெரிவிக்கின்றன.

அந்த வகையில் தமிழ்த்தேசிய இன விடுதலைக்காக, குருதி சிந்தி காத்திட்ட மாவீரர்களின் மாசற்ற தலைவனின் பிறந்த நாளில், மக்கள் உயிர் காக்க நம் குருதியைக் கொடையாகத் தந்து நம் இனத்தின் மீதான பற்றுறுதியை இந்த உலகத்திற்கு எடுத்துக்காட்டிட வேண்டும் என உரிமையோடு அழைக்கின்றேன்’’என்று தெரிவித்திருக்கிறார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

நல்ல பழக்கங்களை குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுப்போம்!

குழந்தைகள் தங்கள் தாய், தந்தை, உடன் பிறந்தவர்களைப் பார்த்து பார்த்துத்தான் ஒவ்வொரு விஷயத்தையும் செய்யப் பழகுகின்றனர். கண் விழித்ததிலிருந்து தூங்கச் செல்வது வரையில் ஒவ்வொரு நிகழ்வையும் அவர்கள் கண்காணிக்கிறார்கள். அதன்...

எம்ஜிஆர் செய்த அந்த செயலை உதயநிதி செய்ய முடியுமா? அமைச்சர் செல்லூர் ராஜூ

மதுரை பேச்சியம்மன் படித்துறை பகுதியில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ,...

27 ஆம் தேதி வெளியே வரும் சசிகலாவால் ஆட்டம் காணப்போகிறார் எடப்பாடி- முக ஸ்டாலின்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், சேலம் மாவட்டம் – எடப்பாடி தொகுதிக்குட்பட்ட குரும்பப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

திராவிட இயக்கத்தை அசைத்து பார்க்க சிலர் முயற்சி ஆனால் இங்கு யாரும் நுழைய முடியாது- அமைச்சர் செங்கோட்டையன்

எம்.ஜி.ஆரின் 104வது பிறந்த நாளையொட்டி கே.கே.நகர் சிவன் பார்க் எதிரில் உள்ள பொப்பிளி ராஜா சாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் முன்னாள் அமைச்சர், அமைப்பு...
Do NOT follow this link or you will be banned from the site!