பகலில் நைட்டி அணியும் பெண்கள் பற்றி தகவல் கொடுப்பவருக்கு ஆயிரம் ரூபாய் சன்மானம்

 

பகலில் நைட்டி அணியும் பெண்கள் பற்றி தகவல் கொடுப்பவருக்கு  ஆயிரம் ரூபாய் சன்மானம்

ஆந்திராவில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் தோகலபள்ளி கிராமத்தில் வட்டி எனும் மலைவாழ் மக்கள் அதிகம் வசித்து வருகின்றார்கள். வட்டி இனத்தின் தலைவர்களாக 9 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் வைத்ததுதான் சட்டம் என்று அவர்களின் போக்கு இருப்பதாக விமர்சனம் எழுந்திருக்கிறது.

தோகல பள்ளி கிராமத்து பெண்கள் காலை 7 மணி இரவு 7 மணி வரை பெண்கள் நைட்டி அணியக்கூடாது என்று வட்டி இனத்தலைவர்கள் உத்தரவிட்டுள்ளனர். நைட்டி என்பதை இரவில்தான் அணிய வேண்டும் என்பது அவர்களது கருத்து.

பகலில் நைட்டி அணியும் பெண்கள் பற்றி தகவல் கொடுப்பவருக்கு  ஆயிரம் ரூபாய் சன்மானம்

இந்த உத்தரவை மீறும் பெண்கள் 2 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் என்றும், பகலில் நைட்டி அணியும் பெண்கள் பற்றி தகவல் கொடுத்தால் அவருக்கு ஆயிரம் ரூபாய் சன்மானம் என்றும் கூறியிருக்கிறார்கள்.

இந்த உத்தரவு பிடிக்காத சில பெண்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால், அதிகாரிகள் வந்து விசாரித்தபோது, அந்த ஊரில் தலைவர்களுக்கு எதிராக ஒருவரும் சாட்சியம் சொல்லவில்லை.