காலில் விழுந்து கதறிய பூங்கோதை… தற்கொலை முயற்சியின் பரபரப்பு பின்னணி

 

காலில் விழுந்து கதறிய பூங்கோதை… தற்கொலை முயற்சியின் பரபரப்பு பின்னணி

ஸ்டாலின் ஆதரவாளர்களின் அடாவடியினால் மன அழுத்தத்தில் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை உட்கொண்டு திமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய எம்.எல்.ஏவுமான பூங்கோதை ஆலங்குடி அருணா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருப்பது திமுகவினரிடையே மட்டுமன்றி தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

முன்னாள் திமுக அமைச்சரான பூங்கோதை ஆலடிஅருணா, தென்காசி மாவட்டம் ஆலங்குடி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். பூங்கோதை ஆலடி அருணா கனிமொழி கோஷ்டி. தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளா் சிவ பத்மநாதன் ஸ்டாலின் கோஷ்டி. இதனாலேயே இருதரப்பினருக்கு இடையே அடிக்கடி மோதல் போக்கு இருந்து வருவதாக சொல்கிறார்கள் தென்காசி திமுகவினர்.

காலில் விழுந்து கதறிய பூங்கோதை… தற்கொலை முயற்சியின் பரபரப்பு பின்னணி

இந்த உட்கட்சி பூசலினால்தான் பூங்கோதை பாஜகவில் சேரப்போகிறார் என்று கூட செய்திகள் வெளியாகியதாக சொல்கிறார்கள் ஆலங்குடி திமுகவினர்.

நீருபூத்த நெருப்பாக இருந்த உட்கட்சி பூசல் நேற்று வெடித்திருக்கிறது.

தென்காசி தெற்கு மற்றும் வடக்கு மாவட்டங்களில் நேற்று நடந்த மகளிரணி, மகளிர் தொண்டரணி சமூக ஊடக பயிற்சிப் பாசறையை கனிமொழி தொடங்கி வைத்து காணொளி வாயிலாக உரையாற்றி இருக்கிறார்.

தென்காசி மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த பூங்கோதையை மேடையில் அமர வைக்காமலும், கீழே உட்காரவும் நாற்காலி கொடுக்கப்படவில்லை என்றும் சொல்கிறார்கள் தென்காசி பகுதியினர். இதனால் பூங்கோதை வெளியே சென்றுவிட்டார். ஆனாலும் பின்னர் வந்து தரையில் அமர்ந்தார். அப்போது சிவ பத்மனாபன் கோஷ்டியைச் சோ்ந்த சிவன் பாண்டியவன், பூங்கோதையை கண்டபடி திட்டினார். அப்போது, பூங்கோதையை வெளியே போகச்சொல்லி மா.செவின் ஆதரவாளர்கள் கூச்சலிட்டனர். இதனால் மனம் உடைந்து, கலங்கிய கண்களுடன், ‘’போதும் விட்டுவிடுங்க..’’என்று பலமுறை அவர்களின் காலை தொட்டு கும்பிட்டார். அப்படியும் ஸ்டாலின் ஆதரவாளர்கள் கூச்சலிட்டதால் பூங்கோதை அங்கிருந்து வெளியேறிவிட்டார் என்று சொல்கிறார்கள் தென்காசி திமுகவினர்.

இந்நிலையில் இன்று அவர் நெல்லை சந்திப்பில் உள்ள ஷிபா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரவில் அளவுக்கு அதிகமாக தூக்கமாத்திரைகளை உட்கொண்ட அவர் காலையில் எழுந்திருக்காததால் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஸ்டாலின் ஆதரவாளர்கள் செய்த அடாவடியினால்தான் அவமானத்தால் பூங்கோதை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாத தென்காசி திமுகவினரிடையே பரபரப்பான பேச்சு இருக்கிறது.