தேனி மாவட்டத்து மக்களை அலற வைத்த மிட்டாய்!

 

தேனி மாவட்டத்து மக்களை அலற வைத்த மிட்டாய்!

மிட்டாய் வடிவில் போதை வஸ்துகள் சந்தைகள் கிடைப்பதால் மாணவ சமுதாயம் இதில் சிக்கி சீரழிந்து வருவது, பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் பெரும் தலைவலியாக இருந்து வரும் நிலையில், மாத்திரை வடிவிலான மிட்டாய்கள் வந்து புதிய தலைவலியை ஏற்படுத்தி இருக்கின்றன.

தேனி மாவட்டத்தின் ஆண்டிபட்டி, கம்பம், பெரியகுளம், உத்தமபாளையம் ஆகிய பகுதிகளில் மாத்திரை வடிவிலான மிட்டாய்கள் விற்கப்படுகின்றன. குழந்தைகளை கவரும் பொருட்டு இந்த வகையான மிட்டாய்கள் விற்பனைக்கு வந்துள்ளன.

தேனி மாவட்டத்து மக்களை அலற வைத்த மிட்டாய்!

ஆனால் இந்த வகையான மிட்டாய்களால் குழந்தைகளுக்கு ஏற்படப்போகும் அபாயத்தினை முன்கூட்டியே உணர்ந்த பெற்றோர், அந்த மிட்டாய்களை தடை செய்ய நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

இத்தகைய மிட்டாய்களை சாப்பிடும் குழந்தைகள், வீட்டில் உள்ள மாத்திரைகளை மிட்டாய் என்று நினைத்து சாப்பிட்டுவிடும் அபாயம் இருக்கிறது. அப்படி ஏதும் அசம்பாவீதம் நடக்கும் முன்பாகவே இந்த வகையான மிட்டாய்களை தடை செய்ய வேண்டும் என்று தேனி மாவட்டத்து மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.