ஐபேக் சர்வேக்கு எதிராக புதிய சர்வே! திமுக – காங்., மல்லுக்கட்டு

 

ஐபேக் சர்வேக்கு எதிராக புதிய சர்வே! திமுக – காங்., மல்லுக்கட்டு

தொகுதிப்பங்கீட்டில் காங்கிரஸ் பலமாக மல்லுக்கட்டிக் கொண்டிருப்பதால் திமுக கூட்டணியில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

ஐபேக் சர்வேக்கு எதிராக புதிய சர்வே! திமுக – காங்., மல்லுக்கட்டு

வரும் சட்டமன்ற தேர்தலுக்காக தேர்தல் பணிகளை கவனிப்பதற்காக திமுக நியமித்திருக்கும் ஐபேக் நிறுவனம், 234 தொகுதிகளிலும் ஒரு சர்வே எடுத்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது. அதையடுத்து அண்ணா அறிவாலையத்தில் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் பேசிய ஐபேக் பிரசாந்த் கிஷோர், கண்டிப்பாக காங்கிரஸை கூட்டணியில் வைத்திருக்க வேண்டும் என்று சொல்லியிருந்தார். அதனால், காங்கிரஸ் கூட்டணியில் தொடரவேண்டும் என்பதையே ஸ்டாலினும் விரும்பினார். இதற்காக அக்கட்சி கேட்கும் தொகுதிகளை கொடுக்கலாம் என்றும் நினைத்திருந்தார். ஆனால், பீகார் தேர்தல் முடிவுக்கு பிறகு அவர் தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டுவிட்டார்.

ஐபேக் சர்வேக்கு எதிராக புதிய சர்வே! திமுக – காங்., மல்லுக்கட்டு


171+63 என்று தொகுதிப்பங்கீடு செய்ய ஸ்டாலின் முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. அதாவது திமுக 171 தொகுதிகளில் போட்டியிடுவது என்றும், காங்கிரசுக்கு 27, மதிமுகவுக்கு 6, விசிகவுக்கு 6, சிபிஐக்கு 6, சிபிஎம்க்கு 6, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 3, மனித நேய மக்கள்கட்சிக்கு 3, இந்திய ஜனநாயக கட்சிக்கு3, இந்திய யூனியன் முஸ்லீம் லீக்குக்கு 3 தொகுதிகள் என்று முடிவெடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

40 தொகுதிகளுக்கு மேல் எதிர்பார்த்திருந்த தமிழக காங்கிரசாருக்கு இது பேரிடியாக இருக்கிறது. ஆனால், காங்கிரஸ் மாநில பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், திமுக கொடுக்கும் சீட்களை வாங்கிக்கொள்வோம். சீட்டுக்காக திமுகவிடம் கடுமையாக பேரம் பேசமாட்டோம் என்று சொன்னதால் தமிழக காங்கிராசை அதிருப்திக்கு உள்ளாக்கி இருக்கிறது.

திமுகவிடம் சரணாகதி அடைவதுபோல் இருக்கிறது குண்டுராவின் பேச்சு. குறைந்த பட்சம் 40 தொகுதிகளாவது தர வேண்டும். இல்லாவிட்டால் மூன்றாவது அணி அமைக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருப்பதாக பேச்சு எழுந்திருக்கிறது.

ஐபேக் சர்வேக்கு எதிராக புதிய சர்வே! திமுக – காங்., மல்லுக்கட்டு

முடிவுகளை மத்திய தலைமை திணிக்கக்கூடாது. மாநில நிர்வாகிகளுக்கும் அதிகாரம் வழங்க வேண்டும். கேரளாவில் மாநில தலைமைதான் கூட்டணியை முடிவு செய்கின்றதோ, அப்படியே தமிழக காங்கிரசாருக்கும் அந்த அதிகாரம் வேண்டும் என்று சொன்ன சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம், திமுக எப்படி ஐ பேக் மூலம் 234 தொகுதிகளிலும் சர்வே எடுத்து வைத்திருக்கிறதோ அப்பத்தான் நாங்களும் 234 தொகுதிகளிலும் ஒரு சர்வே எடுத்து வைத்திருக்கிறோம். எங்களுக்கும் செல்வாக்கும் இருக்கு என்று சொல்லி அதிரவைத்திருக்கிறார்.

40தொகுதிகளுக்கு மேல் கேட்டு காங்கிரஸ் மல்லுக்கட்டுவதால் திமுக கூட்டணியில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.