மகனுக்கு சிலை வைத்த பெற்றோர்- மதுரை நெகிழ்ச்சி!

 

மகனுக்கு சிலை வைத்த பெற்றோர்- மதுரை நெகிழ்ச்சி!

மறைந்தவர்களுக்காக சிலை வைக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. மனைவிக்காக கணவனும், அம்மாவுக்காக பிள்ளையும் சிலை வைத்து வந்த போக, மகனுக்காக சிலை வைத்திருக்கிறார்கள் பெற்றோர்.

வீட்டின் கிரகபிரவேசத்தில் மனைவிக்காக சிலை வைத்து, அவர் மனைவி உயிரோடு இருப்பது மாதிரியே செய்திருந்தார் பாசக்கார கணவர். அதே போது தூத்துக்குடியில் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் மறைந்த மனைவிக்காக தன் வீட்டின் முன்பாகவே சிலை வடித்திருந்தார். சிலையில் கூட பிரியக்கூடாது என்பதற்காக மனைவி சிலைக்கு பக்கத்தில் தன் சிலையையும் வடித்து வைத்துள்ளார் அந்த பாசக்கார கணவர். இந்நிலையில், மதுரையில் உயிரிழந்த தன் மகனுக்காக சிலை வடித்து வைத்துள்ளார்கள் பாசக்கார பெற்றோர்.

மகனுக்கு சிலை வைத்த பெற்றோர்- மதுரை நெகிழ்ச்சி!

மதுரை அவனியாபுரத்தை சேர்ந்தவர்கள் முருகேசன் – சரஸ்வதி தம்பதி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன். மூன்றாவதாக பிறந்த மகன் மாரிகணேஷ். கடைக்குட்டியான இவருக்கு 10 வருடங்களுக்கு திருமணமும் நடத்தி வைத்து அழகு பார்த்துள்ளார்கள். மாரிகணேஷுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

பைக் ரேசரான மாரிகணேஷ் பல விருதுகளை வாங்கி குவித்திருக்கிறார். உடல்நலக்குறைவினால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 18.11.2019 அன்று உயிரிழந்தார். அவரது முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று 6 லட்சம் ரூபாய் செலவில் 6 அடியில் மாரிகணேஷுக்கு மெழுகு சிலை ஒன்றை உருவாக்கி வைத்து அஞ்சலி செலுத்தினர் முருகேசன் – சரஸ்வதி தம்பதி தம்பதியினர்.

மாரிகணேஷ் வாங்கிகுவித்த விருதுகளையும் அவர் சிலைக்கு பக்கத்திலேயே வைத்துள்ளனர்.

இந்த பாசக்கார கணவரின் செயலைப்பார்த்து அவனியாபுரம் பகுதியினர் நெகிழ்ந்தனர்.