காணாமல் போன ஆடு; கசாப்பு கடையில் தொங்கிய தலை, கால்

 

காணாமல் போன ஆடு; கசாப்பு கடையில் தொங்கிய தலை, கால்

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீரமங்கலம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிராமங்களில் சமீப காலமாக ஆடுகள் திருட்டு அதிகமாக இருப்பதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

பைக்கிலும் காரிலும் வந்து ஆடுகளை திருடிச் சென்றுவிடுகிறார்கள். பொதுமக்கள் துரத்திச்சென்றால் வேகமாக சென்று தப்பித்துவிடுகிறார்கள். சிலர் கத்தியைக்காட்டி மிரட்டிவிட்டு தப்பித்து விடுகிறார்கள் என்று போலீசில் அக்கிராம மக்கள் புகாரளித்து வருகின்றனர்.

காணாமல் போன ஆடு; கசாப்பு கடையில் தொங்கிய தலை, கால்

இந்நிலையில் கீரமங்கலத்தில் சந்திரசேகர் என்பவரது வீட்டில் கட்டப்பட்டிருந்த 2 ஆடுகள் நேற்று முன் தினம் இரவு காணாமல் போய்விட்டது. இதனால் நேற்று காலையில் தனது நண்பர்களுடன் ஒவ்வொரு கறிக்கடையாக சென்று தேடினார் சந்திரசேகர். அப்போது, வேப்பங்குடியில் உள்ள ஒரு கறிக்கடையில் காணாமல் போன தனது ஆட்டின் தலை மற்றும் கால் இருந்ததைக் கண்டு திடுக்கிட்டார்.
இந்த ஆட்டை யார் கொண்டு வந்துகொடுத்தார் என்று கேட்டதற்கு கடைக்காரர் உரிய பதிலைச் சொல்லாததால், ஆட்டின் தலையை மட்டும் எடுத்துக்கொண்டு கீரமங்கலம் போலீஸ் ஸ்டேசனுக்கு சென்றார் சந்திரசேகர்.

சந்திரசேகர் கொடுத்த புகாரின் பேரில் கறிக்கடைக்காரர் அழைத்து வரப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் ஆடுகளை கொண்டு வந்து விற்றவர்கள் யார் என்று தெரியவில்லை என்றார். அவரிடம் இருந்த மற்ற ஆடுகளை கொண்டுவந்து அவை யார் ஆடுகள் என்று கேட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.