ஸ்டாலினுக்கு எதிராக நிக்கணுமா? விழுந்து விழுந்து சிரித்த சீமான்

 

ஸ்டாலினுக்கு எதிராக நிக்கணுமா? விழுந்து விழுந்து சிரித்த சீமான்

தாய்மண்ணின் விடுதலைக்காகச் செக்கிழுத்த செம்மல், ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிராகக் கப்பலோட்டிய தமிழறிஞர்
வ.உ.சிதம்பரனாரின் 84 ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர்வணக்கம் செலுத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, அமித்ஷா தமிழகம் வருவதால் ஏதேனும் அச்சம் இருக்கிறதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப,
’’மனிதர்தானே பூதம் கிடையாதே.. ’’என்று சொல்லிவிட்டு சிரித்தார்.

ஸ்டாலினுக்கு எதிராக நிக்கணுமா? விழுந்து விழுந்து சிரித்த சீமான்

பாஜவின் வேல்யாத்திரை குறித்த கேள்விக்கு, ‘’அயோத்தியில் ராமரை கையில் எடுத்த பாஜக, கேரளாவில் ஐயப்பனை கையில் எடுத்த பாஜக, தமிழகத்தில் முருகனை கையில் எடுத்திருக்கிறது. எத்தனையோ ஆண்டுகளாக இருக்கும் பாஜக இப்போது ஏன் முருகனை கையில் எடுக்கிறது. நாங்கள்தான் முருகனை முன்னெடுத்து செல்கிறோம். பைட்டர்கள் என்னதான் உருண்டுபுரண்டு சண்டை போட்டாலும் அவர்களுக்கு பெயர் கிடைக்காது. கதாநாயர்கர்களுக்குத்தான் பெயர் புகழ சென்றுசேரும். அதே மாதிரி முருகன் விவகாரத்தில் அவர்கள் என்ன செய்தாலும் பெருமை எல்லாம் எங்களையே வந்து சேரும். அவர்களுக்கு அதனால் ஒரு பலனும் இருக்காது. கஷ்டப்பட்டு வேல்யாத்திரை நடத்தி நாம்தமிழர் கட்சியை பிஜேபி வளர்க்கிறது’’என்றவர்,

’’அண்ணாமலை திடீர்னு வந்து ஆடு,மாடுகளை வளர்க்கணும்.. இயற்கை வேளாண்மை செய்யணும்ங்கிறார். ஏ.. இத நாங்க 10 வருசமா பேசிக்கிட்டு இருக்கோம்ப்பா’’என்று சொல்லி சிரித்தார்.

ஸ்டாலினுக்கு எதிராக நிக்கணுமா? விழுந்து விழுந்து சிரித்த சீமான்

பாஜக யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது குறித்தும்,தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் எதிர்காலம் குறித்தும் எழுப்பிய கேள்விக்கு, ‘’ஈவிஎம் இயந்திரத்தோடுதான் பாஜக கூட்டணி வைக்கும். அதன் மீதுதான் பாஜவுக்கு அதிக நம்பிக்கை இருக்குது’’என்றவர்,

’’அதிமுகவுக்கு எதிர்காலம் வேணும்னா பாஜகவை விடணும். திமுகவுக்கு எதிர்காலம் வேணும்னா காங்கிரசை விடணும். தமிழ்நாட்டுக்கு எதிர்காலம் வேணும்னா இந்த ரெண்டு கட்சியையும் விடணும்’’என்றார்.

திமுக தலைவர் மு க ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிடுவீர்களா? என்ற கேள்விக்கு, ’’இதெல்லாம் ஒருகேள்வி…’’சொல்லிவிட்டு விழுந்து விழுந்து சிரித்த சீமான், தனக்கு பின்னால் நின்றிருந்த கட்சியினர் அண்ணே நீங்க நில்லுங்க என்று சொல்லவும், ’’ நிக்கலாம்னு எல்லோரும் நினைக்கிறாங்க. நானும் அதையே நினைக்கிறேன். அத அப்புறம் யோசிப்போம்.’’என்றார்.