அதிமுக உதவியுடன் நினைத்ததை முடித்த விஜய்!

 

அதிமுக உதவியுடன் நினைத்ததை முடித்த விஜய்!

இளையதளபதி கட்சி விவகரத்தில் வரும் 20ம் தேதி அவசர முடிவு எடுத்து அறிவிப்பேன் என்று எஸ்.ஏ.சந்திரசேகர் சொல்லியிருந்த நிலையில் அவரது தளபதி மக்கள் இயக்கம் கட்சி தலைவர் ஆர்.கே.ராஜா இன்று தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்திருக்கிறார்.

ஆர்.கே.ராஜினாமா செய்திருக்கிறார் என்று சொல்வதை விட அவரை ராஜினாமா செய்ய வைத்திருக்கிறார்கள் என்றே சொல்கிறார்கள் திருச்சியை சேர்ந்த விஜய் மன்றத்தினர்.

அதிமுக உதவியுடன் நினைத்ததை முடித்த விஜய்!

விஜய் போட்ட உத்தரவை முடித்துக்காட்டி இருக்கிறார் அவரின் தளபதி என்கிறார்கள். விஜய்யின் தளபதி புஸ்லி ஆனந்த் என்பதும் விஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்ல அரசியல் வட்டாரத்திலும் அந்த பெயர் அறிமுகம்தான்.

புதுச்சேரி மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த புஸ்லி ஆனந்த், விஜய் மன்றத்தில் சேர்ந்ததுமே அவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தார் ஆனந்த். அதற்கு தகுந்தமாதிரியே மன்றத்தினரை சரியாக வழி நடத்தி செல்வதாக சொல்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.

இவரைப்போலவே விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து சிறப்பான சமூக பணியாற்றி முக்கியமான நபராக இருந்தவர்தான் ஆர்.கே.ராஜா. திருச்சியை சேர்ந்த இவர் பத்மநாபன் என்றே பலராலும் அழைக்கப்படுகிறார். தொழிலதிபரான இவர் ஆர்.கே. ஆர். ரியல்எஸ்டேட் நடத்தி வருகிறார். விஜய் மன்றத்தில் சார்பில் திருச்சியில் பல்வேறு நலத்திட்ட பணிகள் செய்து வந்ததால் ஆர்.கே.ராஜா மீது விஜய்க்கு நல்ல அபிப்ராயம் இருந்தது. ஆனால், தந்தை எஸ்.ஏ.சியுடன் இணைந்து ராஜா செய்த காரியங்கள்தான் விஜய்யை ரொம்பவே அப்செட் ஆக்கியிருக்கிறது.

அதிமுக உதவியுடன் நினைத்ததை முடித்த விஜய்!


இந்த நேரத்தில் கட்சி தொடங்கியதோடு அல்லாமல், கட்சியின் தலைவராக ஆர்.கே.ராஜாவையே நியமனம் செய்ததால், மன்றத்தின் முக்கிய பொறுப்பாளராக இருக்கும் புஸ்லி ஆனந்திடம் சொல்லி, முதலில் ஆர்.கே.ராஜாவை மன்றத்தில் இருந்து நீக்கச்செய்தார் விஜய்.

இந்த நிலையில் அவரும் 20ம் தேதி அவசர முடிவு எடுத்து அறிவிக்கப்போகிறேன் என்று எஸ்.ஏ.சி. சொல்லி இருப்பதால், அதற்குள் கட்சியையே கலைத்துவிட வேண்டும் என்று நினைத்த விஜய், இதுகுறித்து தனது தளபதி புஸ்லியிடம் ஆலோசனை செய்திருக்கிறார். கவலையை விடுங்க… அத நான் பார்த்துக்கிறேன் என்று களம் இறங்கிய புஸ்லி, முடித்துக்காட்டியிருக்கிறார்.

எஸ்.ஏ.சிக்கும் அவரது கட்சிக்கும் பலமாக இருக்கும் ராஜாவை மடக்கினால் கட்சி குளோஸ் ஆகிவிடும் என்று நினைத்து, ஆர்.கே.ராஜாவை எப்படி மடக்குவது என்று யோசித்த புஸ்லி ஆனந்த், திருச்சி மாவட்ட விஜய் ரசிகர்களிடம் தீவிர ஆலோசனை செய்து, மன்றத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி, விஜய்க்கு களங்கம் ஏற்படுத்துகிறார் என்று ராஜா மீது போலீசில் புகார் கொடுக்க வைத்தார். ஆனால், ராஜா மீது நடவடிக்கை எடுக்க அந்த புகார் அழுத்தமாக இல்லாத காரணத்தினால், என்ன செய்யலாம் என்று மன்றத்தினருடன் புஸ்லி ஆலோசித்தபோதுதான், ராஜா மீதிருக்கும் நிலமோசடி வழக்கை பற்றி சொல்லி நினைவுப்படுத்தி இருக்கிறார்கள். ராஜாவை பணிய வைக்க இதுதான் சரியான வழி என்று நினைத்த புஸ்லி அந்த ஆயுதத்தையே கையில் எடுத்தார்.

ராஜாவோடு இணைந்து விஜய் மன்றத்திலும், ரியல் எஸ்டேட்டிலும் பயணித்த சுந்தரவடிவேலு, கடந்த 2014ம் ஆண்டில் பிரிந்து சென்று, ராஜா மீது நிலமோசடி வழக்கு போட்டார். அந்த வழக்கைத்தான் தற்போது தூசுதட்டி எடுக்க வைத்திருக்கிறார் புஸ்லி. சுந்தரவடிவேலு இதற்கு ஒத்து போனதற்கு காரணம். ராஜாவுக்கு பிறகு சுந்தரவடிவேலுவைத்தான் திருச்சி மாவட்ட தலைவர் ஆக்கியிருக்கிறார்கள்.

அதிமுக உதவியுடன் நினைத்ததை முடித்த விஜய்!

பல்வேறு வழக்குகள் தன்மீது பதியப்பட்டுள்ள நிலையில் ராஜா தலைமறைவானார். இதனால் ராஜாவின் மச்சான், மாமனார், மன்னார்குடி நண்பர் பலரையும் போலீஸ் கடுமையாக தாக்கி விசாரித்திருக்கிறது. இதனால்தான் இன்னொரு சாத்தான்குளம் சம்பவம் நடக்கப்போகிறது என்று ராஜாவின் மனைவி விட்ட வீடியோவினால் அதிர்ந்துபோன போலீஸ் அத்தனை பேரையும் விடுவித்தது.

ஆனாலும், தனிப்படைகள் அமைத்து தமிழகம் முழுவதிலும் ராஜாவை தேடி வந்தது போலீஸ். ராஜாவின் குடும்பத்தினருக்கு வேறு போலீஸ் தரப்பில் இருந்து மிரட்டல்களும் வந்துகொண்டே இருந்ததாக சொல்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

இத்தனைக்கும் காரணம் என்ன என்பதை உணர்ந்த ராஜா, தானே முன்வந்து தலைவர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

பல கொலைகளை செய்தவரைப்போல இத்தனை பரபரப்பாக போலீஸ் ராஜாவை தேடியதன் பின்னணியில் அதிமுக பிரமுகர்கள் இருப்பதாக சொல்கிறார்கள் ராஜா ஆதரவாளர்கள்.

அதிமுக உதவியுடன் நினைத்ததை முடித்த விஜய்!

திமுக ஆதரவாளரான எஸ்.ஏ.சி. போன தேர்தலில் அதிமுகவுக்குத்தான் ஆதரவு கொடுத்தார். கட்சி ஆரம்பித்த பிறகு என்ன செய்வாரோ? மேலும் அவர் தனித்தே போட்டியிட்டாலும் தேவையில்லாம் ஓட்டுகளை பிரித்துக்கொண்டிருப்பார் என்பதை எல்லாம் கணக்கு போட்டுத்தான் ஆளுங்கட்சியினரும் விஜய் விவகாரத்தில் அழுத்தம் கொடுத்தால்தான் போலீஸ் இந்த அளவுக்கு தீவிரம் காட்டி இருக்கிறார்கள் என்றே சொல்கிறார்கள் ராஜா ஆதரவாளர்கள்.