விஜய் மன்ற நிர்வாகியின் மாமூல் வேட்டை

 

விஜய் மன்ற நிர்வாகியின் மாமூல் வேட்டை

விஜய் மக்கள் மன்றம் அரசியல் கட்சியாக மாறும் முன்பாகவே அக்கட்சி நிர்வாகி ஒருவர் அரசியல் கட்சி பிரமுகர்கள் செய்வதைப்போல மாமூல் வேட்டையில் இறங்கி அதிரவைத்திருக்கிறார்.

சென்னை அருகே பெருங்குளத்தூர் அருணகிரி நாதர் தெருவில் உள்ள மளிகைக்கடைக்கு சென்று, அக்கடையில் இருந்த பார்வதியிடம், ‘’நீங்க லைசென்ஸ் இல்லாம பட்டாசு விக்குறீங்க. இதப்பத்தி அதிகாரிககிட்ட சொல்லாம இருக்கணும்னா எனக்கு 40 ஆயிரம் கொடுங்க..’’என்று கேட்டு மிரட்டியிருக்கிரார் ஒரு வாலிபர்.

விஜய் மன்ற நிர்வாகியின் மாமூல் வேட்டை

கொஞ்சம் இருங்க என்று சொல்லிவிட்டு, பீர்க்கன்கரணை போலீசுக்கு பார்வதி போன் செய்து ஆய்வாளர் பொன்ராஜின் தகவல் தெரிவித்த நேரத்தில் அந்த வாலிபர் எஸ்கேப் ஆகிவிட்டார்.

பின்னர் வந்த போலீசார், கடையில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து அந்த வாலிபரை பிடித்தனர். விசாரணையில் அவர் பெருங்குளத்தூர் குண்டுமேடு பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பதும், விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகி என்பதும் தெரியவந்தது.
மோசடி, மிரட்டுதல் பிரிவுகளின் கீழ் அவரை கைது செய்த போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.

கட்சி தொடங்கும் முன்பே, கட்சி பிரமுகர்களை போல வசூல் வேட்டையில் இறங்கிட்டாங்கப்பா என்று அப்பகுதியினரிடையே பேச்சு எழுந்திருக்கிறது.