வீதி வீதியாக பிச்சை எடுக்கும் முன்னாள் போலீஸ் அதிகாரி

 

வீதி வீதியாக பிச்சை எடுக்கும் முன்னாள் போலீஸ் அதிகாரி

பார்ப்பதற்கு கொஞ்சம் தமிழ் எம்.ஏ. படத்தின் ஜீவா மாதிரி இருக்கிறார். வீதி வீதியாக பிச்சை எடுத்து வரும் அவர் முன்னாள் போலீஸ் அதிகாரி என்பதும், என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என்பதும் தெரியவந்ததும் அதிர்ந்தனர் அப்பகுதியினர்.

மத்திய பிரதேசத்தின் குவாலியர் பகுதியில் கடந்த11ம்தேதி அன்று ரோந்து பணியில் இருந்த இரண்டு போலீசார், ஒரு திருமண மண்டபத்தில் வாசலில் குளிரால் நடுங்கிக் கொண்டிருந்த பிச்சைக்காரர் மீது இரக்கப்பட்டு, அவருக்கு தங்களோட ஜாக்கெட் கொடுத்து உதவினார்கள். பின்னர் அவர்கள் தங்களது வாகனத்தை நோக்கி நடந்தபோது,

வீதி வீதியாக பிச்சை எடுக்கும் முன்னாள் போலீஸ் அதிகாரி

‘’ ரத்னேஷ் சிங்…, விஜய் சிங் பதோரியா…’’என்று அந்த பிச்சைக்காரர் அழைத்ததால் போலீசார் இருவரும் அதிர்ந்து திரும்பி வந்தார்கள். பிச்சைக்காரருக்கு எப்படி நம்ம பேரு தெரிஞ்சது என்று அவர்கள் ஆச்சரியப்பட்டு நிற்க, ’’என்னைத்தெரியலையா நான் மனிஷ் மிஸ்ரா..’’என்று சொல்லவும் ஆச்சரியப்பட்டு போனார்கள்.

15 ஆண்டுகளுக்கு முன்பு தங்களுடன் பணியாற்றிய சக காவல் ஆய்வாளரா என்று இருவரும் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர்.

அதன்பின்னர் மனிஷ் மிஸ்ராவை அந்த நிலையில் விட்டுச்செல்ல அவர்களூக்கு மனதுஇல்லை. ஆகவே, ஸ்வர்க் சதன் என்ற ஆதரவற்றோர் இல்லத்திற்கு போன் செய்தனர். அதற்குள் அங்கிருந்தவர்கள் வந்து என்ன விபரம் என்று கேட்க, ‘’இவர் மனிஷ் மிஸ்ரா. 1999ல் மத்திய பிரதேசத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணியில் சேர்ந்தார். குறிபார்த்து சுடுவதில் நிபுணத்துவம் பெற்றவர் மனீஷ் மிஸ்ரா. இவரது தந்தை போலீஸ். அவரது சகோதரரும் காவல் ஆய்வாளர்தான். மனீஷ் மிஸ்ரா ஒரு என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்.

வீதி வீதியாக பிச்சை எடுக்கும் முன்னாள் போலீஸ் அதிகாரி

கடைசியாக அவர் 2005ல் தாட்டியா மாவட்டத்தில் வேலை பார்த்து வந்தார். பணியில் இருந்தபோது மனநிலை பாதித்ததாக சொல்லப்பட்ட நிலையில் அவர் அடிக்கடி காணாமல் போய்விடுவார். ஆனால், திடீரென்று ஒரு நாள் காணாமல் போனார் . 15 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் கிடைத்திருக்கிறார்’’ என்று சொன்னதும் முன்னாள் போலீஸ் அதிகாரியா? என்று அப்பகுதியினர் அதிர்ந்தனர்.

ஸ்வர்க் சதன் இல்லம், மனிஷ் மிஸ்ராவுக்கு முகச்சவரம் செய்து , மொட்டை அடித்து , புது ஆடை அணிவித்து, மருத்துவ சிகிச்சைகள் அளித்து வருகிறார்கள்.